தளபதி விஜய் 68 படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறாரா? சந்திப்பில் நடந்தது என்ன ?

இயக்குநர் சிறுத்தை சிவா தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கியவர். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி அத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்ணாத்த விளம்பரம் தொடர்பாக பல டிவி சேனல்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குநர் சிவாவிடம் தொடர்ச்சியாக ஒரே கேள்வி முன்னிறுத்தப்பட்டது. தொடர்ந்து மூன்று படங்களை நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்கிவிட்டீர்கள். தளபதியை வைத்து எப்பொழுது படம் எடுக்கப்போகிறீர்கள். அதற்கு பதலளித்த சிவா, விஜய் சாரிடம் பலமுறை கதைகளை கூறியுள்ளேன், அவர் கேட்டு விட்டு கூடிய சீக்கிரம் நாம் இணைந்து படம் செய்யலாம் என்று உறுதியளித்துள்ளார். அதை தொடர்ந்து பல கதைகளை விஜய்காகவே தயார் செய்திருக்கிறார் சிவா. இன்று காலை நடிகர் விஜய் அலுவலகம் பனையூரில் இவர்களுக்கான சந்திப்பு நடைப்பெற்றது. அதில் சிவா விஜயிடம் கதையை கூறியதாகவும் அவர் விரைவில் அதற்கான பணிகளில் ஈடுபட போவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் 66 படத்தின் படப்பிடிப்பு பணி நடந்து வருவகிறது. அடுத்து விஜய் 67 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக அதிகாரபூர்வ தகவல் வரும் என்பதை லோகேஷ் தெரிவித்தார். இதை தொடர்ந்து விஜயின் 68 வது படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கப்போவதாக இன்று நடந்த சந்திப்பு தெரிவிக்கின்றன, என்று கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.