”மிரள்” படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Axess Film Factory G டில்லி பாபு வழங்கும்
பரத்-வாணி போஜன் நடிக்கும் “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !

Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள “மிரள்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.

தமிழ் சினிமாவில் நல்ல தரமான உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தயாரிக்கும் மிகச்சிலரில் ஒருவர் Axess Film Factory தயாரிப்பாளர் G டில்லி பாபு. அவரது தயாரிப்பில் வெளியான ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் என பல திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது தன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ‘மிரள்’ என்ற பெயரில் அடுத்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் பார்வையாளர்கள் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்

தொழில்நுட்பக் குழுவில் M.சக்திவேல் (கதை- வசனம்-இயக்கம்), பிரசாத் S.N. (இசை), சுரேஷ் பாலா (ஒளிப்பதிவு), கலைவாணன் R (எடிட்டர்), மணிகண்டன் சீனிவாசன் (கலை), டேஞ்சர் மணி (ஸ்டண்ட்), சச்சின் சுதாகரன்-ஹரிஹரன் M – Sync Cinema (ஒலி வடிவமைப்பு), கவின் முதல்வன் (ADR), அரவிந்த் மேனன் ( ஒலி கலவை), ஸ்ரீதேவி கோபாலகிருஷ்ணன் (ஆடை வடிவமைப்பாளர்), M முகமது சுபையர் (ஆடைகள்), வினோத் சுகுமாரன் (மேக்கப்), G.S. முத்து – Accel Media (DI-கலரிஸ்ட்), கிரண் ராகவன் – Resol FX (VFX மேற்பார்வையாளர்), E ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) , சந்துரு – தண்டோரா (பப்ளிசிட்டி டிசைன்), சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு), DEC (புரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்), பால முருகன் (தயாரிப்பு மேலாளர்).

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments