Baba Black Sheep full Trailer Launch | black sheep | Vingnesh

கல்லூரி கலை நிகழ்ச்சி போல, கோலாகலமாக நடந்த “பாபா பிளாக் ஷிப்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர்.

பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது.

இப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு  அறிமுகமாகும் புதுமுகங்களை,  தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பிரபலங்கள், மேடையில் ரசிகர்களுக்கு  அறிமுகப்படுத்தினர்.

முதலாவதாக தமிழ் திரையுலகின் முன்னணி  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் – இயக்குனர் ராஜ் மோகனை மேடையில் அறிமுப்படுத்தினார்.


இதனைத்தொடர்ந்து
இயக்குனர் லிங்குசாமி – ஹீரோ நரேந்திரபிரசாத்தை அறிமுப்படுத்தினார்,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் – ஹீரோ அயாஸை அறிமுப்படுத்தினார்,

இளவரசு சார் – குட்டி மூஞ்சி விவேக்கை அறிமுப்படுத்தினார்,

நடிகர் மணிகண்டன் – ராம் நிஷாந்த்தை அறிமுப்படுத்தினார்,

இயக்குனர் ஓபேலி கிருஷ்ணா – பிரகதீஸ்வரனை அறிமுப்படுத்தினார்,

நடிகர் பஞ்சு சுப்பு சார் – குட்டி வினோவை அறிமுப்படுத்தினார்,

நடிகை வாணி போஜன் – சேட்டை ஷெரீப் அறிமுப்படுத்தினார்,

ஈரோடு மகேஷ் & ஹீரோ
தர்ஷன் ஆகியோர் இணைந்து – கதாநாயகியாக அம்மு அபிராமியை அறிமுகப்படுத்தினர்,

விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்து – அதிர்ச்சி அருணை அறிமுகப்படுத்தினர்,

சாய்ராம் நிறுவனத்தின்  சாய்பிரகாஷ் – ஹர்ஷத் கானை அறிமுப்படுத்தினார்,

ரியோ & சுட்டி அரவிந்த் – Rj விக்னேஷை மீண்டும் மாணவனாக மேடையில் அறிமுகப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், பெரும் ரசிகர் கூட்டத்தின் முன்னிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டது.

இணையத்தில் வெளியான குறுகிய நேரத்தில் டிரெய்லர், பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. பாடல்கள் அனைத்தும் இளைஞர்களின் விருப்பமாக ப்ளேலிஸ்டில் இடம் பிடித்து வருகிறது.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அது பற்றிய அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள்
அயாஸ் நரேந்திர பிரசாத்
அம்மு அபிராமி
‘விருமாண்டி’ அபிராமி
RJ விக்னேஷ்காந்த்
சுப்பு பஞ்சு
சுரேஷ் சக்ரவர்த்தி
போஸ் வெங்கட்
வினோதினி வைத்தியநாதன்
சேட்டை ஷெரீப்
மதுரை முத்து
கேபிஒய் பழனி
சுந்தர்
நக்கலைட்ஸ் பிரசன்னா
நக்கலைட்ஸ் தனம்

தொழில்நுட்ப வல்லுநர்கள்
ஒளிப்பதிவு –  சுதர்சன் சீனிவாசன்
இசை சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – விஜய் வேலுக்குட்டி
கலை இயக்கம் – MSP. மாதவன்
ஸ்டண்ட் –  விக்கி
நடன அமைப்பு – அஸார், லீலாவதி குமார்.
விளம்பர வடிவமைப்புகள் –  கோபி பிரசன்னா
பாடல் வரிகள் – யுகபாரதி, A.Pa.ராஜா, RJ விக்னேஷ்காந்த், தனிக்கொடி.
ஸ்டில்ஸ் – வேலு
மக்கள் தொடர்பு –  சதீஷ் (AIM)
தயாரிப்பு நிறுவனம் – ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் – ராகுல்
இயக்கம் – ராஜ்மோகன் ஆறுமுகம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments