Zee5 orginals Five ,six ,seven ,eight press meet

ஜீ5 ஒரிஜினல்ஸ் “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

தமிழ் ஓடிடி உலகில் புதுமையான படைப்புகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வரும் ஜீ5 தளத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” இணையத் தொடர். முன்னணி இயக்குநர் விஜய் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இத்தொடரை விஜய், பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் இணைந்து இயக்கியுள்ளனர். முழுக்க நடனத்தைப் பின்னணி கதைக்களமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

இத்தொடரில் இளம் நடிகர்களான தித்யா சாகர் பாண்டே, சின்னி பிரகாஷ், விவேக் ஜோக்தாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாகேந்திர பிரசாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நவம்பர் 18 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ள இத்தொடரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு தனியார் மாலில், பொதுமக்கள் மத்தியில் கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் மிருதுளா ஸ்ரீதரன் பேசியதாவது..
இந்த விழா இவ்வளவு பெரிய அரங்கில் நடப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி. இங்கு நிறையப் பிரபலங்கள் வந்து எங்களை வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த ஐடியா விதையாக இருந்த போதே எங்களை நம்பி வாய்ப்பளித்த, உடனிருந்து உருவாக்கிய ஜீ5 மற்றும் சிஜு சார் மற்றும் கௌஷிக் ஆகியோருக்கு நன்றி. இந்த தொடரில் உழைத்த குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த தொடர் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசியதாவது…
டான்ஸை வைத்து ஓடிடியில் எதுவுமே இல்லை ஏனென்றால் டான்ஸை வைத்து உருவாக்குவது மிக கடினம் அதிலும் குழந்தைகளை வைத்து உருவாக்குவது அதை விடக் கடினம். ஆனால் விஜய் அதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். ஒரு பெண் குழந்தை தன்னுடைய உலகம் என்ன எனத் தேடி, வெளியே வந்து ஜெயிப்பதை பேசும், இந்த படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

எடிட்டர் ஆண்டனி பேசியதாவது…
இந்த தொடர் மிக அற்புதமாக வந்துள்ளது. நவம்பர் 18 முதல் ஜீ5 யில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் பேசியதாவது..
டான்ஸை வைத்து உருவாக்கியுள்ள தொடரில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. “ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” பார்க்கவே மிக வித்தியாசமாக இருக்கிறது. விஜய் சார் இயக்கத்தைப் பார்க்க ஆவலோடு இருக்கிறேன். தித்யா மற்றும் விவேக் மிக நன்றாக நடித்துள்ளார்கள். இத்தொடர் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

இசையமைப்பாளர் சாம் CS பேசியதாவது..
123 படம் பார்த்தபோது இந்த மூன்று டான்ஸ் மாஸ்டர்களுடன் வேலை செய்ய வேண்டும் என நினைத்தேன் அது இப்போது நிறைவேறிவிட்டது. நான் வேலை பார்த்ததில் அதிகம் பேர் பார்த்தது லக்‌ஷ்மி படத்தின் மொராக்கோ சாங் தான் அதே போன்ற கதை கொண்ட இந்த படைப்பும் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும். எனக்கு வாய்ப்பு தந்ததற்கு விஜய் சாருக்கு நன்றி. ஜீ5 நிறுவனத்திற்கு நன்றி. இது வெறும் டான்ஸ் காம்படேஷன் பற்றிய படைப்பு மட்டுமல்ல, நிறைய உணர்வுகள் இதில் இருக்கிறது உங்களுக்கு கண்டிப்பாகப் பிடிக்கும்.

நடன இயக்குநர் நாகேந்திர பிரசாத் பேசியதாவது..
இயக்குநர் விஜய் சார், சாம், கார்க்கி சார் மூவரும் திரைத்துறையில் எப்போதும் முன்னணியில் இருக்கும் கூட்டணி. அவர்களுடன் வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஆசீர்வாதம். விஜய் சார் இதனை அற்புதமாக இயக்கியுள்ளார். கிட்ஸ் உடன் நடனமாடியது சவாலாக இருந்தது உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி.

நடன இயக்குநர் ராஜு சுந்தரம் பேசியதாவது…
இந்த படக்குழுவினருக்கும் இயக்குநர் விஜய்க்கும் வாழ்த்துக்கள். நடனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள தொடருக்கு ஆதரவு தந்த ஜீ5 க்கு நன்றி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாலா பேசியதாவது..
எனது உதவியாளர் மிருதுளா இந்த தொடரை இயக்கியுள்ளார். அவருக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இந்த தொடர் பார்க்க நன்றாக உள்ளது. தொடரில் பங்குகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நடிகர் ஜீவா பேசியதாவது..
“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” டான்ஸ் ஸ்டெப் . இதைப் புரிந்து கொள்ளவே எனக்கு ரொம்ப காலம் ஆனது. இந்த தொடரில் நிறையப் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். பார்க்க மிகப் புதுமையாக இருக்கிறது. விஜய் சார் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இத்தொடர் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

இயக்குநர் விஜய் பேசியதாவது…
பாலா சார் எனது மானசீக குரு அவர் வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த தொடருக்கு மூன்று ஹீரோ பரேஷ் ஜீ, சாம் CS, மதன் கார்க்கி மூவரின் பங்களிப்பும் அற்புதம். சந்தீப்பின் ஒளிப்பதிவு மிக தரமானதாக இருந்தது. பிரசன்னா JK, மிருதுளா ஸ்ரீதரன் மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி. குழந்தைகள் மிக அற்புதமாக நடித்துள்ளார்கள். இந்த மாதிரி தொடர் இந்தியாவில் இது தான் முதல் முறை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments