விக்ரம் நீங்க நல்லவரா..? கெட்டவரா..? விக்ரம் விமர்சனம்..
விக்ரம் நீங்க நல்லவரா..? கெட்டவரா..? விக்ரம் விமர்சனம்..
நாட்டில் போதை பொருட்களை அழிக்கும் நல்லவனாக வருகிறார் கர்ணன் என்ற காதாப்பாத்திரத்தை ஏந்திய கமல்ஹாசன். முதல் அறிமுக காட்சிய கமலின் கண்கள் தான். பத்தல பத்தல பாடல் திரையரங்கையே நடன மேடையாக்குகிறது. இந்த வயதில் இத்தனை சிரமங்கள் என்றால் அது கமல்ஹாசன் கலைத்துறை மேல் வைத்திருக்கும் அதீத காதல் தான். படம் முழுக்க கமலைக் காண ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சிறு ஏமாற்றம். ஆனால் இடைவேளையில் திரையரங்கே அதிரும் அளவுக்கு கைத்தட்டல்களுடன் முடிகிறது படத்தின் முதல் பாதி. இரண்டாம் பாதியில் படத்தில் இருக்கும் ஒட்டுமொத்த ஸ்டார் பட்டாளத்துக்கும் அவர்களின் நடிப்பிற்கும் பஞ்சமே இருக்காத அளவுக்கு காய் நகர்த்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் ,சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் , காயத்திரி, அர்ஜூன் தாஸ், மகேஷ்வரி, சிவானி நாராயணன், சுவாதிஸ்டா, ஆண்டனி வர்கீஸ், ஹரிஸ் உத்தமன், ஹரிஸ் பேரடி , சந்தான பாரதி, மைனா நந்தினி, ரமேஷ் திலக், விஜய் டிவி தீனா போன்றோர் ஒரு காட்சியில் திரையில் தோன்றினாலும் மனதில் நிற்கும் அளவிற்கு பழைய விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களின் இணைப்பு விக்ரம் 2022 படத்தில் இருக்கிறது. கமல்ஹாசனின் மகனை கொன்ற போதை பொருட்களின் தயாரிக்கும் கூட்டதை ஒழிக்கிறாரா அல்லது அவர் அழிகிறார என்பதே படத்தின் முழு கதை.
1. இயக்கம் & திரைக்கதை – 7/10
2. இசை – 8/10
3. எடிட்டிங் – 8/10
4. பாடல் – 7/10
5. நடனம் – 7/10
6. ஒளிப்பதிவு- 8/10
விக்ரம் மக்களிடையே விற்கப்படும் all the best