Udayanithi Stalin has said that 75 crore rupees has come from the distribution of Vikram movie in Tamil Nadu

விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்ததில் 75 கோடி ரூபாய் ஷேர் வந்துள்ளது என விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கதில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் கிளப்பில் நடைப்பெற்றது. விழாவில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி கூறும் வகையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் டான் வெற்றி விழாவில் பேசும்போது நான் சில உண்மைகளை கூறினேன். அது போல இந்த திரைப்பட வெற்றி விழாவிலும் சில உண்மைகளை நான் கூறுகிறேன். விக்ரம் திரைப்படத்தை முதலில் பார்த்தவன் நான் இண்டர்வல் முடிந்ததும் இது மாதிரியான ஒரு இண்டர்வல் சீன் வந்ததில்லை என கூறினேன். விக்ரம் திரைப்படம் ஹிட்டாகும் என நினைத்தோம், ஆனால் சத்தியமாக இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என நினைக்கவில்லை என தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் விக்ரம் திரைப்படத்தை விநியோகம் செய்த அடிப்படையில் கூறுகிறேன், இந்த திரைப்படம் மூன்றாவது வாரத்தில் தற்பொழுது நுழைந்துள்ளது. எல்லோரும் வெளிப்படையாக பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் நானும் என்னுடைய கணக்கை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன். விக்ரம் திரைப்படம் இதுவரை மட்டும் 75 கோடி ரூபாய் ஷேராக கிடைத்துள்ளது என கூறியுள்ளார். விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்காளுக்கு 30%, விநியோகஸ்தருக்கு 70% என்ற சதவிகித அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 75 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

இந்த விழாவில் அனிருத் பேசுகையில், விக்ரம் மறக்க முடியாத பயணம். ஆடியோ வெளியீட்டு விழாவில் படம் சிறப்பாக வந்திருப்பதாக கூறினேன். அதை இன்று ரசிகர்கள் உண்மையாக்கி உள்ளனர். அவர்களுக்கு நன்றி. என்னிடம் கேரளாவில் கமல்ஹாசன் என்ன பரிசு கொடுத்தார் என உசுப்பேற்ற கேட்டனர். அதற்கு விக்ரம் திரைப்படமே எனக்கு கிடைத்த பரிசு என்று கூறினேன் என தெரிவித்தார். அத்துடன் இந்த திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் கமல்ஹாசன் படத்திற்கு இசை அமைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாக அனிருத் கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய லோகேஷ் கனகராஜ், லோகேஷ் யுனிவர்ஸ் என்று அனைவரும் சொல்லும் போது பயமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தை எழுதியதற்கு கொரோனாவிற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அதன் மூலம் எழுதுவதற்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது என தெரிவித்தார். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்த உடன் கமல்ஹாசன் தொலைபேசியில் அழைத்து ஓய்வெடுக்க வேண்டாம் அடுத்த படத்தின் வேலையை தொடங்குங்கள் என்று கூறினார். அடுத்த படத்தின் வேலையை நான் தொடங்கி விட்டேன். நீங்கள் கொடுத்த நம்பிக்கையில் அடுத்த (விஜய்) படத்திற்கு செல்கிறேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments