துல்கர் சல்மான் “சீதா ராமம்” ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம்

வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” படத்தில் இளமை நாயகன் துல்கர் சல்மான் நடிக்கிறார், அழகு தேவதை மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்க, மிகவும் சிறப்பு வாய்ந்த பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். காதல் கதைகளை மயக்கும் விதத்தில் சித்தரிப்பதில் பெயர் பெற்ற ஹனு ராகவாபுடி இப்படத்தை இயக்குகிறார், ஸ்வப்னா சினிமா சார்பில் அஸ்வினி தத் இப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் முன்னோட்டம் மூலம் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது வெளியிட்டுள்ளனர். “சீதா ராமம்” திரைப்ப்டம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

படத்தின் இசை பாடல் குறித்த முன்னோட்ட விளம்பரங்கள் சமீபத்தில் தயாரிப்பு தரப்பில் வெளியிடப்பட்டன. முதல் சிங்கிள் ‘ஓ சீதா ஹே ராமா’, காதல் மெல்லிசை பாடல், இசை ஆர்வலர்களை மயக்கியது. இந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில், சார்ட்பஸ்டர் ஆனது, இப்போது ஆல்பத்தின் அடுத்த பாடல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் ‘சீதா ராமம்’ படத்திற்கு PS வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். கூடுதல் ஒளிப்பதிவை ஸ்ரேயாஸ் கிருஷ்ணா செய்துள்ளார்.

நடிகர்கள்: துல்கர் சல்மான், மிருணால் தாகூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த், கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜய் குமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா, வெண்ணெலா கிஷோர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர்: ஹனு ராகவாபுடி

தயாரிப்பாளர்கள்: அஸ்வினி தத்

பேனர்: ஸ்வப்னா சினிமா

வழங்குபவர்கள்: வைஜெயந்தி மூவிஸ்

ஒளிப்பதிவு: PS வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்

படத்தொகுப்பாளர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்

தயாரிப்பு வடிவமைப்பு: சுனில் பாபு

கலை இயக்குனர்: வைஷ்ணவி ரெட்டி, பைசல் அலி கான்

ஆடை வடிவமைப்பாளர்: ஷீத்தல் ஷர்மா

நிர்வாக தயாரிப்பாளர்: கீதா கௌதம்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments