The producer is angry with actor Jeeva | Deaf Frogs

*நடிகர் ஜீவா மேல கடுப்பான தயாரிப்பாளர்*

சென்னை சத்தியம் திரையரங்கில் நடைப்பெற்ற டெஃப் ப்ராக் வலைத்தளம் அறிமுக விழா நடைப்பெற்றது. தனிதிறமை கொண்ட  இசைக் கலைஞர்கள், ராப் பாடகர்கள் மற்றும்  வெளியீட்டு விழா நடைப்பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நடிகர் கார்த்திக், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், விஷ்ணு விசால், விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி, சந்தோஷ் நாராயணன் , சிவா ஆகியோர் கலந்துக்கொண்டனர். வழக்கமான இசைவெளியீட்டு விழா மாதிரி இல்லாமல், புது முயற்சியாக ரியாலிட்டி ஷோவில் வர மாதிரி, மேடையில் வண்ண விளக்கு பசர் வைத்து  சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் அதை அழுத்தி விளக்கு எரிந்தவுடன் பாடல் வெளியாகும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு ஒரு பாடல்களாக வெளியிட்டு, விழாவினை சிறப்பித்தனர். இதில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மேடையில் அழைத்ததும் ஜீவா உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்தார். எப்பொழுதும் எல்லா விஷயங்களில் தன்னுடன் சேர்ந்து தான் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும், ஆனால் இந்த டெஃப் ப்ராக் படத்திற்கு மட்டும் தன்னை சேர்க்காமல் எதுவும் சொல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்ததற்கு ஜீவா மீது கோபமாக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு பதிலளித்த ஜீவா, இப்பொழுது கூட கிரவுட் பண்ட் ஓபன்ல தான் இருக்கு, இப்ப கூட உங்களது தாராள மனதை காட்டலாம் என்று தெரிவித்தார். மேலும் மேடையில் புதுமுக ராப் பாடகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இசைக் கலைஞர்கள், வெப்சிரீஸ் இயக்குநர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வலைத்தளத்தில் வெளியிப்படும் என்று தெரிவித்தனர். மேலும் டெஃப் ப்ராக் என்ற பெயர் வைத்ததற்கு, நெகட்டிவ் வைப்ஸ், கமெண்டுக்கள் எல்லாம், கடந்து செல்லவே, கெட்டவை எல்லாம் காதில் வாங்காமல் கடந்த செல்லவே இந்த பெயர் என்றும் நடிகர் ஜீவா குறிப்பிட்டார்.