Tamil movie kulasamy review | vimal | Tanya hope
குலசாமி திரைவிமர்சனம்
நடிகர் விமல் கடந்த வாரம் தெய்வம் மச்சான் என்று படத்தின் பெயர் மூலம் நகைச்சுவை செய்தார் இந்த வாரம் குலசாமி என்ற படத்தில் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். குல சாமி சமூகத்திற்கு இந்த படம் மிகப்பெரிய கருத்தை கொண்டு வந்திருக்கிறது ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை என்றுதான் ஒரு மசாலா படமாக தான் எடுத்திருக்கிறார்கள் உண்மை சம்பவத்தை கையாண்டிருந்தாலும் ஆக்சன் வரும் சினிமா தனமும் அதிகமாக இந்த படத்தில் காணப்படுகிறது சரி இந்த படத்தின் கதையை பார்ப்போம்
விமல் அவருக்கு ஒரே தங்கை பிளஸ் டூ தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை செய்கிறார் விமல் தங்கை விமலுக்கு தன் தங்கையை எப்படியாவது டாக்டர் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை ஆனால் தங்கையோ நான் இனி படிக்க மாட்டேன் என்கின்றார் ஒரு வழியாக தங்கையை டாக்டர் படிக்க வைக்க மதுரைக்கு அழைத்துக் கொண்டு வருகிறார் இங்கு இவருக்கு பாலியல் பலாத்காரம் ஏற்பட்டு கொலை செய்யப்படுகிறார் இவரை யார் கொலை செய்தார்கள் இந்த கொலை கும்பல் யார் என்பதை சொல்லும் அதை தான் குலசாமி.
கல்லூரி தலைமையாசிரியர் தன் மாணவிகளை வறுமையை காட்டி அவர்களை தவறான வழியில் வழிகாட்டுகிறார் இதன் மூலம் பல பெண்களின் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது அதில் அதில் ஒருவர் விமல் தங்கை விமல் தங்கை போல் பல பெண்களின் வாழ்க்கை சூறையாடப்படுகிறது இது ஒரு கட்டத்தில் விமலுக்கு தெரிய இந்த கும்பலை பழி வாங்க நினைக்கிறார் இந்த கும்பலை எப்படி பழிவாங்குகிறார் என்பதை இயக்குனர் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைக்கதையாக அமைத்துள்ளார் உண்மை கதை எடுத்து அதற்கான நியாயமான திரைக்கதையை கொடுத்திருந்தால் படம் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்லலாம் சண்டையை நம்பிய இயக்குனர் கதையையும் திரைக்கதையையும் கோட்டை விட்டுவிட்டார் சில இடங்களில் காமெடி என்கின்ற பெயரில் காமெடி என்கின்ற பெயரில் நம்மை நெலிய வைக்கிறார்.
நடிகர் விமலுக்கு காதல் படங்களும் நகைச்சுவை படங்களும் தான் எடுபடுகிறது ஆக்சன் படங்கள் நிச்சயமாக அவருக்கு கை கொடுக்கவில்லை குறிப்பாக இந்த படம் அவருக்கு மிகவும் மோசமான ஒரு சோதனை படம் என்று தான் சொல்ல வேண்டும் ஒரு நல்ல நடிகரை பயணத்தில் இப்படி ஒரு படம் தேவையா என்பது தான் ஒரு கேள்விக்குறி
படத்தின் நாயகியாக தன்யாவும் இவருக்கு படத்தில் பெரிதாக வேலையும் இல்லை கவர்ச்சியும் இல்லை காதலும் இல்லை விமலுக்கு கிளைமாக்ஸ் காட்சிகளில் உதவி செய்வதாக நடித்திருக்கிறார் மற்றபடி இவருக்கு பெரிதாக வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்
படத்தின் பின்னணி இசை நம் காதல் கிழிக்கிறது டைட்டில் பாடல் மட்டும் மிகவும் அருமையாக உள்ளது
இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தி ஒரு உண்மை சம்பவத்தை கதைக்களமாக அமைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் மிகவும் பழமையான திரைக்கதை படத்தில் பொழுதுபோக்கு அம்சம் என்பது எந்த விதத்திலும் இல்லை.
இந்த படத்துக்கு பலம் சேர்க்க விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார் பாவம் நட்பின் ரீதியாக இதை ஒற்றுக் கொண்டு விட்டாரா என்று தெரியவில்லை வசனங்கள் எங்கும் பேசும் படியாக அமையவில்லை
இயக்குனர் குட்டிப்புலி சரவணன் சக்தி தான் மனதில் பட்டதை எல்லாம் பல காட்சிகளாக படம் ஆக்கி உள்ளார் படத்தில் லாஜிக் இல்லை அட்லீஸ்ட் உண்மையான சம்பவங்களாக திரைக்கதை அமைத்திருக்கலாம் அதுவும் இல்லை என்பது தான் வேதனை மொத்தத்தில் குலசாமி வேதனை சாமி