Tamil movie Demonte Colony 2 review | Arulnithi | Priya Bhavani Shankar
இயக்குனர் அஜய் ஞானமுத்து ஏற்கனவே இயக்கத்தில் ப்ரியா பவானி சங்கர் , அருள்நிதி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் டிமான்ட்டி காலனி 2.. அவர் இயக்கிய இரண்டு திரில்லர் படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இந்த டிமான்ட்டி காலனி 2 படத்தில் அதை தக்கவைத்து கொண்டுள்ளார் இயக்குனர் ..
படத்தில் அருள்நிதி பிரியா பவானிசங்கர் ஆண்டி ஜாஸ்கெலைனன் டிசெரிங் டோர்ஜி அருண் பாண்டியன் முத்துக்குமார்,அதிதி – மீனாட்சி கோவிந்தராஜன்,சர்ஜனோ காலிட் , அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ். இசையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் டிமான்ட்டி காலனி 2
2015ஆம் ஆண்டில் யில் வெளியான டிமான்ட்டி காலனி முதல் பாகத்தில் அருள்நிதி இறப்பது போல் முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே தொடர்ச்சி ஆக பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் காண்பிக்கப்படுகிறது.இந்த பாகத்தில் அருள்நிதி இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.அதில் சீனிவாசன் (அருள்நிதி) மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன் ரகுநந்தன் (அருள்நிதி), தந்தையின் சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார்.
அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் டெபி (பிரியா பவானி சங்கர் ), அவருடன் இணைந்து டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான அமானுஷ்ய சம்பவங்களே டிமாண்டி காலனி 2-யின் விறுவிறுப்பான திரைக்கதை.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கு டெபி விடைதேடி அலைகிறார்.
அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தொடர்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் அருமையான ஒரு கதை கொடுத்து இருக்கும் இயக்குனரை பாராட்டியே வேண்டும் பல படங்கள் இரண்டாம் பாகம் மூண்டாரம் பாகம் வரும் ஆனால் கதைக்கு சம்மந்தம் இல்லாமல் இருக்கும் அப்படி இல்லாமல் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கான இண்டர்லிங்க் தொடர்பு படத்தின் பலம்.. திரைக்கதை விறுவிறுப்பான ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன என்று ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
ரகு கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சுயநலவாதியாக வரும் அருள்நிதி, சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை.தனக்கு கொடுத்து இருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து கட்சிதமாக இருக்கிறார் அருள்நிதி.
ப்ரியா பவானி ஷங்கர் கதாபாத்திரம் கதை , காதலை மிகவும் உணர்ந்து படைத்ததோடு ஒன்றியிருக்கிறார். அதேபோல அருண்பாண்டியன் புத்தமத சாமியாராக வரும் டிசெரிங் டோர்ஜி படத்துக்கு மிக பெரிய பலம்
சாம் C.Sயின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். காட்சிக்கு காட்சி திகிலூட்ட இசையின் தனித்துவம் உதவுகிறது. பாடல்கள் ஓகே ரகம்.
காட்சிக்கு காட்சி நம்மை மிரட்ட மட்டும் செய்யாமல் ஒரு நல்ல கதையிலும் திரைக்கதையிலும் இயக்குநர் கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தில் பல ட்விஸ்ட்கள் ஒளிந்திருப்பது நம்மை சீட் எட்ஜில் அமர வைக்கிறது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம்.
மொத்தத்தில் டிமாண்டி காலனி 2 வெற்றி