’Kavalthurai Ungal Nanban’ Producer & Actor Collaborate Again for a new project tentatively titled “Production No.2”
“காவல்துறை உங்கள் நண்பன்” தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் இணையும் இரண்டாவது திரைப்டம் !!
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் இனிதே துவங்கியது !!
BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி டிராமா திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியுள்ளது. கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில், காரைக்குடியில் இப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக BR Talkies Corporation தயாரிப்பில், நடிகர் சுரேஷ் ரவி நடித்த “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சக ரீதியாக தரமான திரைப்படமென பெரும் பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இதே தயாரிப்பு நிறுவனமும் நடிகர் சுரேஷ் ரவியும் இணையும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்போதைக்கு Production No. 2 என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய நகர வாழ்க்கை, கிராமத்து வாழ்வியல் இரண்டையும் படம்பிடித்து காட்டும் வகையில், சுரேஷ் ரவி, யோகிபாபு இருவரும் இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் கலக்கலான காமெடி டிராமாவாக இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தினை இயக்குநர் K பாலையா எழுதி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து தேனி, கொடைக்கானல் மதுரை, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
,
இப்படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தீபா பாலு பிரிஜிடா சாகா, தேஜா வெங்கடேஷ் ஆகியோருடன் கருணாகரன், வேல ராமமூர்த்தி ஆதித்யா கதிர் அப்பு குட்டி, ஆதிரா, ஞானசம்பந்தம் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
தொழில் நுட்ப குழு விபரம்
இயக்கம் – K பாலையா
ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்
இசை – N R ரகுநந்தன்
படத்தொகுப்பு – தினேஷ் போனுராஜ்
கலை – C S பாலச்சந்தர்
ஆடை வடிவமைப்பாளர் – N J சத்யா
PRO – Sathish (AIM)