I was very fond of the film Sardar ever since it was named after him Actor Karthik says | Sardar 2 | P.S Mithran

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வினில்..,

நடிகர் கார்த்தி பேசியதாவது…
சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்கு டிரெய்னிங் தந்து, உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். இது உண்மையில் நடந்தது. அதை அருமையான கதையாக்கி படமெடுத்தார் மித்ரன். இப்போது அந்த பாத்திரம் திரும்ப வருவது மகிழ்ச்சி. எல்லோரும் முதன் முறையாக ஒரு உளவாளி தனக்காக இல்லாமல், நாட்டுக்காக போராடுகிறான் என இந்தப்படத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள் அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்படத்தில் இன்னும் பெரிய போரை நடத்தவுள்ளார் சர்தார். அதிலும் எஸ் ஜே சூர்யா சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். செட்டில் போய்ப் பார்க்கும் போது அவ்வளவு பிரமிப்பாக இருக்கும், அத்தனை செலவு செய்துள்ளார்கள். லக்‌ஷ்மன் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் படத்திற்காக எல்லாவற்றையும் செய்ய வேண்டியது தயாரிப்பாளரின் கடமையாக ஆகிவிட்டது. எஸ் ஜே சூர்யா சாருக்கு எவ்வளவு தீனி போட்டாலும் தீரவில்லை இதிலும் அசத்தியுள்ளார். சாம் சி எஸ் கைதிக்கு பிறகு அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். படம் உங்களை கண்டிப்பாக திருப்திப்படுத்தும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம் நன்றி.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் பேசியதாவது…
முதன் முதலில் சர்தார் எடுக்கும்போது சர்தார் எப்படி இருக்க வேண்டும் என்பது என் மனதில் இருந்தது. கார்த்திக்கு மேக்கப் போட்டு முதல் சீன் எடுக்கும்போதே, இந்த கேரக்டர் நிறைய கதை சொல்ல முடியும் என்று தோன்றியது. அப்போதே இந்தப் பயணம் துவங்கிவிட்டது. இந்தப்படம் சர்தார் ப்ரீக்குவல் மற்றும் சீக்குவல் என இரண்டாகவும் இருக்கும். சர்தாரின் ப்ளாஷ்பேக்கில் இந்தக் கதை நடக்கும். இது மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகும் படம். அதற்கு லக்‌ஷ்மன் சாருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சர்தாரில் கார்த்தி சாரை பாடாய்படுத்தினோம், அதைத் தாண்டியும் மீண்டும் மேக்கப் போட்டு இந்தப்படத்திற்கு வந்ததற்கு நன்றி. இந்த ஃபர்ஸ்ட் லுக், சர்தாரில் யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை அறிமுகப்படுத்ததத் தான். எஸ் ஜே சூர்யா சார் கதை கேட்டு முடிக்கும் முன்பே ஒத்துக்கொண்டார். இதில் அசத்தியுள்ளார். படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் குமார் பேசியதாவது…
இறைவனுக்கு வணக்கம், சர்தார் முடித்தபோது அதன் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கலாம் என ஹீரோவும் இயக்குநரும் முடிவு செய்தார்கள், அப்போது மித்ரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். இது பெரிய கேன்வாஸில் இருக்கும் ஓகேவா என்றார். சர்தார் படம் கார்த்தி கேரியரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதற்காக அவர் கடுமையாக உழைத்திருந்தார். அதனால் இது பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என உடனே ஓகே சொன்னேன். சர்தார் மேக்கப் போடவே அவ்வளவு நேரம் கஷ்டப்பட்டார். இதற்காக கார்த்தி இன்னும் கடுமையாக உழைத்துள்ளார். மித்ரன் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். உங்களுக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசரை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறோம் நன்றி.


நடிகர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது….
“சர்தார் 2” ஒரு ரிமார்க்கபிள் படம், மித்ரன் சார் வந்து கதை சொன்ன போதே, மிக மகிழ்ச்சியாக இருந்தது. என் கேரக்டர் மிக வித்தியாசமாக இருந்தது. நம்ம நேட்டிவிட்டியுடன் இன்டர்நேஷனல் தரத்தில் நம் மக்களுக்கு புரிகிற மாதிரி, மிக அழகாக இந்தக்கதையை உருவாக்கியுள்ளார். இறைவன் நல்ல நல்ல டைரக்டராக எனக்குத் தருகிறான். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் எனும் நம்பிக்கை இருக்கிறது. 3 அற்புதமான மனிதர்கள், கார்த்தி சார், அவர் என்ன சொன்னாலும் நடத்திக் காட்டும் தயாரிப்பாளர், தரமாக உழைக்கும் இயக்குநர் மூவரும் மிகச்சிறந்த மனிதர்கள். கார்த்தி சாரிடம் உள்ள ஸ்பெஷல், மூளை மனதிற்கு தடையில்லாமல் அவரிடம் வார்த்தைகள் வரும். மிக நல்ல மனதுக்காரர். அந்த மேக்கப் போடவே நாலு மணி நேரம் ஆகும், அதை பொறுத்துக் கொண்டு உழைத்துள்ளார். அவருக்கு இது பெரிய வெற்றி தரும், அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசியதாவது…
இது மிகப்பெரிய மேடை, 10 வருடம் முன் இந்த இடத்தில் மித்ரன் என்னிடம் சர்தார் கதையைச் சொல்லியுள்ளார். அவர் எப்போதும் ஹாலிவுட் தரத்தில், நம் கதையை சொல்லும் இயக்குநர் அவருடன் படம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. தூக்கத்தில் எழுப்பினாலும் ஸ்பை திரில்லருக்கு இசையமைப்பேன், எனக்கு பிடித்த ஜானர். கார்த்தி சாருடன் கைதி படத்திற்கு பிறகு வேலை பார்க்கிறேன். மிகத் தனித்துவமான திறமைசாலி. அவரிடம் எப்போதும் தான் என்ன செய்கிறோம் என்பதில் தெளிவு இருக்கும். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. பிரின்ஸ் பிக்சர்ஸ் என் குடும்பம் மாதிரி. இவர்களுடன் பல ஜானர்களில் வேலை பார்த்துள்ளேன். இன்னும் பல படங்கள் பணியாற்ற வேண்டும். இந்தப்படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

 

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள்
கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு, மற்றும் பலர்.

இசை – சாம் சிஎஸ்
ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன், சேத்தன் டிசோசா
கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார்
படத்தொகுப்பு – விஜய் வேலு குட்டி
தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி
இணை தயாரிப்பு – A வெங்கடேஷ்
தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் – S.லக்‌ஷ்மன் குமார், இஷான் சக்சேனா
மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (S2 Media)

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments