I did not raise anyone. They are capable and that’s all I used them for – Director Pa. Ranjith
‘நட்சத்திரம் நகர்கிறது’ இசை வெளியீட்டு விழா
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில்
நாயகி துஷாரா பேசியதாவது…
‘நட்சத்திரம் நகர்கிறது’ நான் மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மாவாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித் சார். ரெனே மூலம் அது தொடருமென நம்புகிறேன். இந்தப்படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் பாருங்கள்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது..
என்னாலயே இத நம்ப முடியல. விஸ்காம் படிக்கும் போது மெட்ராஸ் படம் பார்த்துட்டு ரஞ்சித் சார் நம்பர் கண்டுபிடிச்சு பேசினேன். அவருக்கு நான் யாருனு கூட தெரியாது. ஆனா ரொம்ப நேரம் படம் பத்தி பேசினாரு. அவர் படத்துல நடிப்பேன்னு கனவுல கூட நினைக்கல. ரொம்ப சந்தோசமா இருக்கு. ரஞ்சித் சாருக்கு நன்றி. படத்துல என்னோட பேர் இனியன் இந்த கதாப்பாத்திரம் என்னோட ரியல் லைஃப் மாதிரிதான் எல்லோருக்கும் பிடிக்கும்.
கலையரசன் பேசியதாவது….
படத்துல என்னோட பேர் அர்ஜூன், ரொம்ப முக்கியமான பாத்திரம் எல்லோரும் திட்டிட்டே நடிச்சிருக்காங்க. நிஜத்த கேள்வி கேக்கற ஒரு பாத்திரம். ரஞ்சித் கதை எழுதுறதும், அதை படமாக்கறதும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப்படம் காதல கொண்டாடும்.
இசையமைப்பாளர் தென்மா பேசியதாவது…
சுயாதீன இசையமைப்பில் 15 வருடங்களாக இருக்கேன். ரஞ்சித் சார் சந்தித்த பிறகு வாழ்க்கை மாறிவிட்டது. இது எனது நாலாவது படம் ஆனால் ரஞ்சித் சார் எனக்கு பெரிய அறிமுகம் கொடுத்து விட்டார். அவர் நிறைய பேருக்கு அறிமுகம் தந்துள்ளார். பாடகர் அறிவு மெயின் ஸ்ட்ரீமில் கொண்டாடப்படுவது அவரால் தான். என் இசையே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அது எல்லோருக்கும் பிடிக்காது. ஆனால் ரஞ்சித் சார் தான் ஊக்கப்படுத்தினார். நிறைய புதுமுகங்கள் இதில் உழைத்துள்ளார்கள்.
இயக்குநர் சசி பேசியதாவது…
சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் செயல்கள் கோழைத்தனமாக இருக்கும். ஆனால் அப்படியானவரில்லை ரஞ்சித் துணிச்சலாக எல்லாவற்றையும் செய்வார். இந்த தலைப்பே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு புத்தக தலைப்பை எப்படி தைரியமாக வைக்கிறார் என ஆச்சர்யமாக இருந்தது. யாழி பிலிம்ஸ் அவரை சுதந்திரமாக படமெடுக்க விட்டதற்கு நன்றி. ரஞ்சித் படம் எல்லாவற்றையும் பார்த்தவுடன் என் கருத்தை சொல்லிவிடுவேன். இந்தப்பட கதாப்பாத்திர அறிமுக டிரெய்லரே வித்தியாசமாக இருந்தது, அது படம் உடனே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இந்தப்படம் ரஞ்சித் படங்களில் முக்கியமான படமாக இருக்கும்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..
‘அட்டகத்தி’ பார்த்தபோது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விசயத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசியதாவது…
2007 காலகட்டத்திலிருந்து ரஞ்சித்தை தெரியும். ஒரு டாக்குமெண்ட்ரிக்கு ஸ்டோரிபோர்ட் செய்யத்தான் வந்தார். நான் படம் செய்த போது நானே அவரை அழைத்தேன். அவர் லிங்குசாமியிடம் தான் சேர்த்து விட சொன்னார். பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார். ரஞ்சித் படங்களை பார்க்கிற போது பிரமிப்பாக இருக்கிறது. அவருக்குள் இவ்வளவு சிந்தனைகள் இத்தனை விசயங்கள், குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார். அவரது ஒவ்வொரு படமும் ஆச்சர்யம் தரும். இந்தப்பட டிரெய்லரே மிரட்டிவிட்டது. ஹாலிவுட் படம் போல் உள்ளது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா பேசியது
‘அட்டகத்தி’ துவக்கத்துக்கு வெங்கட் பிரபு தான் காரணம். அவர் தான் என் அஸிஸ்டெண்ட் படம் பண்ணிருக்கார் வாங்கன்னு கூட்டிப்போனார். படம் பிடித்தது. அதை விட ரஞ்சித் பிடித்துப்போனார். அவரோடு அப்போது துவங்கிய பயணம், மெட்ராஸ் இப்போது விக்ரம் வைத்து படம் பண்ணுவது வரை தொடர்கிறது. ஒரு மனிதனாக ரஞ்சித் பல திறமையாளர்களை வளர்த்துவிட்டுள்ளார். அவர் செய்வதெல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. புக் வெளியிடுகிறார், கேஸ்ட்லெஸ் கலக்டிவ் நடத்தி வருகிறார். தான் கொண்ட கொள்கையில் சிறிதும் தடம் மாறாமல் பயணித்து வருகிறார். அவருடன் இணைந்து பயணிப்பது பெருமையாக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.

கலைப்புலி தாணு பேசியதாவது..
ரஞ்சித் தனக்கு இருக்கும் நட்புக்களை ஒன்று சேர்த்து பயணிப்பவர். கபாலியில் பயணிக்கும்போது அவரது எண்ணங்களை பகிர்ந்துகொள்வார். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத போது அவருக்கு தெரியாமலேயே தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவரது பாணியில் இருந்து விலகி, ஹைஃபையாக நட்சத்திரம் நகர்கிறது செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த படைப்பு அடித்தட்டு மக்களின் கதையை சொல்லும். தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.
யாழி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் மனோஜ் பேசியதாவது
குதிரைவால் படத்திற்கு கோ புரடியூசர் தேடும்போது தான் ரஞ்சித் உடன் நெருங்கி பழகினோம். அவர் செய்து வரும் விசயங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது. யாழி ஃபிலிம்ஸில் இந்தப்படத்தை செய்யலாம் என்ற போது யாழி ஃபிலிம்ஸ்க்கு இந்தப்படம் சரியாக இருக்குமென்று நினைத்தோம். இந்தப்படம் கதையாகவே நிறைய ஆச்சர்யங்கள் இருந்தது, படமும் நன்றாக வந்துள்ளது. நீலம் புரடக்சன்ஸ் பெரிய உதவியாக இருந்தது. அடுத்து பொம்மை நாயகி படமும் நீலமுடன் இணைந்து செய்து வருகிறோம். இன்னும் நிறைய படைப்புகள் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப்படத்தின் வரவேற்பை பார்க்க ஆவலுடன் உள்ளோம்.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…
