Disney+ Hotstar’s third Malayalam original series on january 05 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸை புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார், தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸை மெருகேற்றுகிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ ஏழு வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை ரசிக்க முடியும்.

YT Link : https://www.youtube.com/watch?v=QPuOLNzPR7k

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments