Actress Nayanthara sensational speech in sathyabama college
பொதுவாக எந்த பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்த வந்த நடிகை நயன்தாரா, தனது திருமணத்திற்கு பிறகு சென்னையில் உள்ள சத்தியபாமா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் நடிகர் ராணாவும் பங்கு பெற்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மத்தியில் நயன்தாரா சிறப்புரை வழங்கினார். நயன்தாராவை பார்த்து கல்லூரி மாணவர்கள் ஆரவாரத்தில் கூச்சலிட்டு குதித்தனர். மாணவர்கள் மத்தியில் பேசிய நயன்தாரா “நீங்கள் இந்த ஆண்டு எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களது எதிர்காலத்தை முன்னிறுத்தி எடுக்க வேண்டும்.அவ்வாறு எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர்காலத்தை இன்னும் அழகாக
உங்கள் பெற்றோருக்கும் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.உலகத்தில் மற்றவர்களால் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவோம். ஆனால் இந்த கல்லூரி காலங்களில் வாழ்க்கையை மிகவும் அழகாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உரை நிகழ்த்தினர்.