Actor Vijay Sethupathi first Thiruvalluvar Sculpture as part of the “Illam Thorum Valluvar”
“இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார் !
உலகப்பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகையின் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பரையிலும் கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலை “மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதிக்கு” அளிக்கப்பட்டது.
தலைவர்கள், அறிஞர்கள், பிரபலங்களின் சிலைகளை புதிய தொழில்நுட்பத்தில் கல் சிலையாக வடிப்பதில் மிகப்புகழ்பெற்ற நிறுவனம் SILAII(சிலை) நிறுவனம் ஆகும்.
நம் மனித இனத்திற்கு உலகப்பொதுமறையாம் திருக்குறளை தந்த தத்துவஞானி “திருவள்ளுவர்” சிலையை ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறையில் கொண்டு சேர்ப்பதன் மூலம், அவர் குறள் வழி வாழ்க்கையை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவரது கருத்துக்களை பின்பற்ற வைக்கலாம் எனும் முயற்சியாக சிலை நிறுவனம் ‘இல்லம் தோறும் வள்ளுவர்’ திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்தின்படி அனைவரது வீட்டிற்கும் வள்ளுவர் சிலை சென்று சேரும் வகையில் மிகக்குறைந்த விலையில் உருவாக்கி உள்ளது சிலை நிறுவனம். இந்த சிலைகள் ரூபாய் 499 ல் துவங்கி ரூ 4999 வரை பல்வேறு அளவுகளில் கிடைக்கும்.
இத்திட்டத்தை அனைவருக்கும் பரப்பும் வகையில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முதல் சிலையை பெற்றுக்கொண்டார்.
இத்திட்டத்தில் 50,000 வது சிலையை கன்னியாகுமரி வள்ளுவர் சிலையின் அடிவாரத்திலும், 1 லட்சமாவது சிலையை மயிலையில் ‘தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின்’ அவர்கள் கையால் மிகப்பெரும் விழாவில் வழங்கி வாங்குபவர்களை கௌரவிக்க உள்ளனர்.
அனைவருக்கும் பரிசாகவும் அளிக்க கூடிய இச்சிலைகள் WWW.SILAII.COM என்ற இணையதளத்தில் கிடைக்கும்.