Actor Shivrajkumar joins Vishnu Manju’s ‘Kannappa’! movie
விஷ்னு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் இணைந்த சிவராஜ்குமார்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்னு மஞ்சுவின் கனவுத் திரைப்படமான ‘கண்ணப்பா’-வின் படப்பிடிப்பு சமீபத்தில் நியூசிலாந்து நாட்டில் தொடங்கிய நிலையில், அப்படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் முக்கியமான வேடங்களில் நடிக்க உள்ளனர்.
பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ், கம்ப்ளீட் ஆக்டர் என்று அழைக்கப்படும் மோகன்லால் ஆகியோர் இப்படத்தின் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தற்போது ‘சிவண்ணா’ என்று அன்பாக அழைக்கப்படும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், இந்த கூட்டணியில் இணைந்திருப்பது ‘கண்ணப்பா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.
கன்னடத் திரைப்படமான ‘சிவ மெச்சிடகண்ணப்பா’- வில் தின்னா / அர்ஜுனா கதாபாத்திரத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்தது, தற்போது ‘கண்ணப்பா’-வில் அவருக்கான முக்கியத்துவத்தை தொடர்புபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அவரது நடிப்பு, அனுபவம் மற்றும் கதாபாத்திரத்துடனான அழகான தொடர்பை கொண்டு, விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ படத்தில் சிவராஜ்குமாரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காவியத்தை உயிர்ப்பிக்க தயாரிப்பு தரப்பு தயாராகி வரும் நிலையில், இந்த திரைப்படத்தில் தலைசிறந்த பங்களிப்பை சிவராஜ்குமார் நிச்சயம் வழங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ‘கண்ணப்பா’ வில் அவரது பாத்திரம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படத்தின் வசீகரிக்கும் சிறப்பம்சமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார் பிளஸ் சேனலுக்காக மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகும் ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்திய திரையுலகில் கதை சொல்லலை மறுவரையறை செய்வதோடு மட்டுமல்லாமல், கண்ணப்பாவின் அசாதாரணக் கதையையும், சிவபெருமான் மீதான அவரது அசைக்க முடியாத பக்தியையும் விவரிக்கும் காவியமாக உருவாகி வருகிறது.