யார் அந்த விக்ரம்..? விக்ரம் படத்தில் கமல்ஹாசன் விக்ரம் இல்லையாம்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 3 ஆம் தேதி வெளிவரயிருக்கும் திரைப்படம் விக்ரம் 2022. ஆக்ஷன் நிறைந்த கதைக்களத்தில் பல முன்னனி நடிகர்கள் நடித்துள்ளனர். கமல்ஹாசன், விஜய்சேதுபதி,பகத் ஃபாசில், சூர்யா போன்ற பெரிய பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகிகளுக்கான ரோலே இல்லையாம். முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த திரில்லர் கதையாகவே நகர்கிரதாம் கதை. விக்ரம் 2 க்கு வாய்ப்புகள் நிறைய இருக்குறதா கூறப்படுகிறது. மூனு மணி நேரத்தில் ஓட்டு மொத்த கதையை சொல்லமுடியாம தான் இந்த முடிவ செய்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ். மேலும் பழைய விக்ரம் 1986க்கும் இந்த விக்ரம் படத்திற்கும் கனெக்ஷன் இருக்குறதா தகவல் வெளியாகியிருக்கு. அதுமட்டுமல்லாமல் நகர்புறங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் புலனாய்வு அதிகாரியாக வருகிறார் கமல், காதாப்பாத்திரத்தில் அவருடைய பெயர் அமர். அமர் ஒரு புலனாய்வு அதிகாரியாக நகர்புறங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கிறார். விசாரனையின் போது பல அதிர்ச்சியான தகவல்கள் தெரியவருது, தொடர் கொலைகளுக்கு பின்னால் பெரிய மாஃபியா கும்பல் இருக்கிறதை கண்டறிகிறார் அமர். பின்னர் அமருக்கும் மாஃபியா கும்மலுக்கும் நடக்கும் சுவரஸ்யமான கதைக்களம் தான் முழு நீளப்படமும். கமல் அமராக நடிக்கு போது விக்ரம் யார் என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுகிறது. அது திரைக்கதையிலும் பெரிய சஸ்பென்ஸாக வைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பகுதியில் விக்ரம் யார் என்று இயக்குநர் சொல்லப்போகிறாரா அல்லது முதல் பாகத்திலயே சொல்லப்போகிறாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.