Varisu Success full running 300 Crore Collection Close Succession | Vijay | Rashmika Menon
3வது வாரத்திலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு
300 கோடி வசூலை நெருங்கும் வாரிசு
சமீபத்தில் பொங்கல் பண்டிகை வெளியீடாக தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவான வாரிசு படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்று பல இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஓசூர் லட்சுமி தேவி திரையரங்கில் 17 நாட்களை தாண்டியும் ஹவுஸ்புல் காட்சிகலாக வாரிசு ஓடிக்கொண்டு இருக்கிறது. பாண்டிச்சேரி பிவிஆர் திரையரங்கில் மற்ற திரைப்படங்களை விட இரு மடங்கு அதிகமான காட்சிகள் வாரிசு படத்திற்காக திரையிடப்பட்டு வருகின்றன.
திருச்சி மரியம் திரையரங்கில் இதுவரை விக்ரம் படத்திற்கு தான் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை (footfall) தந்தனர் என்கிற சாதனை இருந்து வந்தது. அதை வாரிசு திரைப்படம் முறியடித்து தற்போது அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
அதேபோல திருநின்றவூர் வேலா சினிமாஸ், அறந்தாங்கி விஎஸ் திரையரங்கம் ஆகியவற்றிலும் வாரிசு படத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஈரோடு பள்ளிபாளையம் ஜெயலட்சுமி சினிமாஸ் திரையரங்கிலும் மூன்றாவது வாரத்தில் வாரிசு திரைப்படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் இருந்து வருகிறது.
படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாக வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வாரிசு படத்தின் வசூல் 300 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.