Salman Khan reveals what to expect from the film before its trailer launch on October 16

டைகர்-3யின் ஆக்சன் கண்கவர்வதாக இருந்தது” ; அக்-16ல் அதன் டிரைலர் வெளியாவதற்கு முன் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என சல்மான்கான் கூறுகிறார்

சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘டைகர் 3’ டிரைலரை அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். மேலும் படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள ‘டைகர் 3’ மிகப்பெரிய தீபாவளி வெளியீடாக வெளியாக இருக்கிறது.

சல்மான்கான் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸில் உருவான ஏக்தா டைகர், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஸ்பை யுனிவர்ஸ் படங்களை மக்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களின் பார்வைக்கு விருந்தாக புதிதாக, தனித்துவமான ஆச்சர்யமான சிலவற்றை கொடுக்க வேண்டியது முக்கியமானதாக இருந்தது. டைகர் 3 படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர் அது கண்கவரும் விதமாக இருக்க வேண்டி இருந்தது. அங்கே வேறு எந்தவொரு விருப்பமும் இருந்ததில்லை” என்கிறார்..

மனீஷ் ஷர்மா இயக்கியுள்ள இந்த டைகர் 3 படத்தின் டிரைலருக்கு இணையத்தில் வெறித்தனமான எதிர்பார்ப்பு இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸில் நூறு சதவீத பிளாக் பஸ்டர் வெற்றியை பெறுவதற்காக எப்படி ஆதித்ய சோப்ரா யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸை வடிவமைத்துக்கொண்டு இருக்கிறார் என்பதை இந்த திரைப்படம் சொல்ல இருக்கிறது. ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹி, வார், பதான், மற்றும் இப்போது டைகர் 3 ஆகியவை யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்கள் ஆகும்.

தனக்காக படப்பிடிப்பில் விரிவாக திட்டமிடப்பட்ட அதிரடி சண்டைக்காட்சிகளை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும்போது ஒரு குழந்தையாக மாறிவிட்டேன் என்றகிறார் சல்மான் கான்

“டைகர் 3 படக்குழு இதுவரை இந்திய சினிமாவில் பார்த்திராத வகையில் பல விஷயங்களை செயல்படுத்தி இருக்கிறது. அதிரடியாக உருவாக்கப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளில் நானும் ஒரு பங்காக இருக்க விரும்பினேன். மேலும் அந்த காட்சிகளில் நான் நடித்தபோது ஒரு குழந்தையை போலவே மாறிவிட்டேன். இதுபோன்ற மிகப்பெரிய தருணங்களுடன் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக டைகர் 3 டிரைலரை நாங்கள் வெளியிடும்போது படத்தை விளம்பரப்படுத்தும் எங்களது அடுத்த சொத்தாக அது அமையப்போகிறது” என்கிறார் சல்மான் கான்.

சல்மான் மேலும் கூறும்போது, “டைகர் 3 படத்தின் கதை முழுவதும் அந்த நாளை காப்பாற்ற சூப்பர் ஏஜென்ட் டைகர் மேற்கொள்ளும் உயிருக்கு ஆபத்தான பணியில் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும்” என்கிறார்.

“டிரைலர் மற்றும் திரைப்படத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. மேலும் உண்மையிலேயே தீவிரமான ஒரு கதைக்கருவை கொண்டுள்ள ஒரு பொழுதுபோக்கு ஆக்சன் படத்திற்காக தயாராகுங்கள்.. டைகர் 3 படத்தின் கதை உடனடியாக என்னை கவர்ந்திழுத்தது. ஆதியும் அவரது குழுவும் இந்த கதையுடன் வந்தபோது என்னால் நம்ப முடியவில்லை. இது உறுதியாக டைகரின் மிகுந்த அபாயகரமான மிஷனாக இருக்கும் என்பதால் அவர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவதற்காக தனது வாழ்க்கையில் மிகப்பெரிய ரிஸ்க்கும் எடுக்கவேண்டி இருக்கிறது” என்றும் கூறுகிறார் சல்மான்கான்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments