Tamil movie Thandatti review | Actor Pasupathi | Ammu Abirami
தண்டட்டி திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் என்றாலே கொஞ்சம் வலுவான கதையும் அர்த்தமுள்ள கதையமாக தான் இதுவரை நாம் பார்த்து ரசித்து வந்தோம் அந்த வகையில் இந்த படமும் அப்படி ஒரு சிறந்த படம் என்று கூறலாம். ஒரு ஆழமான அழுத்தமான காதலை அற்புதமான திரை கதையுடன் நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் தண்டட்டி
இந்தப் படத்தில் பசுபதி ரோகினி விவேக் பிரசன்னா அம்மு அபிராமி தீபா மற்றும் பலர் நடிப்பில் கே எஸ் சுந்தரமூர்த்தி இசையில் மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் ராம் சங்கையா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் தண்டட்டி
பசுபதி தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் ரோகினியை காதலிக்கிறார் இதை அவர்கள் பெற்றோர்கள் எதிர்க்கின்றனர் இதை மீறி இருவரும் திருமணம் செய்கிறார்கள் திருமணத்தன்று ரோகிணிக்கு பசுபதி தண்டத்தியை காதல் பரிசாக கொடுக்கிறார். அப்போது ரோகினி என் கட்டை எரியும் போதும் இந்த தண்டட்டி என்னுடன் தான் எரிய வேண்டும் என்று ஆசை கூறுகிறார். திருமணத்தன்று ரோகிணியின் பெற்றோர்கள் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருவரையும் பிரிக்கின்றனர் பசுபதியை அடித்து கிணத்தில் போட்டு விடுகிறார்கள் இதனால் ரோகிணி அவர் இறந்துவிட்டார் என்று நினைத்துக் கொள்கிறார் அவர் இருந்து அவன் இறந்து விட்டான் என்று அவருக்கு வேறு ஒரு திருமணமும் செய்து வைக்கிறார்கள். பல வருடங்கள் கழித்து மீண்டும் பசுபதி ரோகினியை சந்திக்கிறார் சந்தித்த சிறிது நேரத்திலே ரோகினி இறந்து விடுகிறார் ரோகிணியின் களத்தில் இருந்த தண்டியை அவர் அவரை எரிக்கும் போது அந்த தண்டத்தையும் சேர்த்து எரித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை