Tamil movie Striker Review 2023 | Horror movie | striker
படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ஜஸ்டின் விஜய் (ஜோஷி) தனது மேல் படிப்பை முடித்துவிட்டு ஒரு கார் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறார். பல கார்களை பழுது பார்க்கும் ஹீரோ ஒரு காரை முழுதும் பழுது பார்த்து முடிப்பதற்குள் கார் டெலிவரி செய்யப்படுகிறது. அந்த காரில் பயணம் செய்தவர்கள் பிரேக் பிடிக்காமல் விபத்துக்கு உள்ளாகிறார்கள். இதை அறிந்த ஜோஷி மிகவும் கவலைப்படுகிறார்.
அந்த சமயத்தில் அவரின் நண்பர்கள் சிலர் அமானுஷ்யங்கள் பற்றி ஜோசியிடம் தெரிவிக்கிறார்கள். பிறகு தனது மெக்கானிக் வேலையை விட்டு ஒரு இன்ஸ்டிடியூட்டில அமானுஷ்யங்களை பற்றி படித்து வருகிறார். அமானுஷ்யங்களை பற்றிய வகுப்பு எடுப்பவராக கஸ்தூரி வருகிறார். மாணவர்களுக்கு அமானுஷ்யங்கள் என்றால் என்ன அது எங்கெங்கு உள்ளது என்பதைப் பற்றி முழுமையாக சொல்லிக் கொடுக்கிறார்.
இருந்தாலும் பாடல்கள் அவ்வளவாக மனதில் ஒட்டவில்லை, படத்தில் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் த்ரில்லரா எடுத்திருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் இந்த ‘ஸ்டிரைக்கர்’ பயம் இல்லாத பேய் படம்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்.
நடிகர்கள்: ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயா சதீஷ் குமார்
இயக்கம்: எஸ் ஏ பிரபு
ஒளிப்பதிவு: மனீஷ் மூர்த்தி
இசை: விஜய் சித்தார்த்