tamil film producers ellection results | tamil film active producers association statement
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. முரளி ராமசாமி மற்றும் அவரின் அணிக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் சினிமாவின் தாய் சங்கமாக, பாரம்பரியமாக இயங்கி வருகிறது. அதன் தலைவராக, உறுப்பினர்களின் பேராதரவுடன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திரு. முரளி ராமசாமி அவர்களுக்கும், பொருளாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, திரு. சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்களுக்கும், செயலாளராக மீண்டும் தேர்ந்தடுக்கப்பட்டுள்ள திரு.R. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. S. கதிரேசன் அவர்களுக்கும், துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. G.K.M. தமிழ் குமரன் மற்றும், திருமதி அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கும், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.S. சௌந்தரபாண்டியன் அவர்களுக்கும், மற்றும் தேர்வாகியுள்ள 26 செயற்குழு உறுப்பினர்களுக்கும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சார்பில் எங்களின் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. முரளி ராமசாமி அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கடந்த நிர்வாகத்தின் போது, திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக எப்படி இணைந்து பயணித்தோமோ, அதே போல இந்த முறையும் இணைந்து பயணிக்க, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆர்வத்துடன் உள்ளது.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,
பாரதிராஜா,
தலைவர்
T. சிவா
பொது செயலாளர்
கோ. தனஞ்ஜெயன்
பொருளாளர்