Tabby handbags launch event attended by film stars & celebrities

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ‘கோச்’ பிராண்டின் புதிய பிரீமியம் ரக டெபி (Tabby) கைப்பைகள் அறிமுக நிகழ்ச்சி
–––––
திரைப்பட நட்சத்திரங்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு

சென்னை, மே 29,2023: ஆடை ரகங்கள், அழகு சாதனப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் ரகங்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டிருக்கும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியின் பல்லேடியம் அரங்கில் உலகப் புகழ் பெற்ற நியூயார்க் ‘கோச்’ பிராண்டின் புதிய டேபி( Tabby) கைப்பைகள் அறிமுக விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் ஜனனி, பார்வதி நாயர், யாஷிகா ஆனந்த், சம்யுக்தா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பிற துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆடம்பர பிராண்டான ‘கோச் நியூயார்க்’ என்பது கோச் என அழைக்கப்படுகிறது, அதன் அதிநவீன லெதர் கைப்பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்கள் என அனைத்தும் உலக அளவில் உள்ள வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவையாகும். அமெரிக்க பிரீமியம் ரக பிராண்டான இதன் பொருட்கள் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள உயர் பணக்காரர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

கடந்த 2018–ம் ஆண்டு கோச் ஸ்டோர் மீண்டும் துவக்கப்பட்டதில் இருந்து, பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியின் பல்லேடியத்தில் சென்னையில் உள்ள ஆடம்பர வாடிக்கையாளர்கள் தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தைப் பெற்று வருகின்றனர். ஏனெனில் இதன் பிரத்யேக கோச் ஸ்டோர் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் பிரத்யேக வசதிகளைக் கொண்டுள்ளது.

பல்லேடியத்தில் மே 27–ந்தேதி மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதல் இறுதி வரை ‘கோச்’ பிராண்டின் அதி-ஆடம்பரத்தின் மிக உயர்ந்த பொருட்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதன் பிரத்யேக லெதர் டெபி கைப்பைகளின் புதிய தொகுப்பை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முழுமையாக ரசித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் நவநாகரீகத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த பிராண்டின் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை பார்வையாளர்கள் பார்த்து வெகுவாக ரசித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments