Suzhal web series screened exclusively for movie celebrities

திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ் ‘

அமேசான் பிரைம் வீடியோவின் ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், இதனை உருவாக்கிய புஷ்கர் & காயத்ரி, தங்களுடைய திரையுலக நண்பர்களுக்காக பிரத்யேகமாக சென்னையில் திரையிட்டனர்.

இன்றைய தேதி இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகளவில் பெருமளவில் எதிர்பார்க்கப்படும் வலைதளத் தொடர், அமேசான் பிரைம் வீடியோ ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’. இந்த தொடர் ஜூன் மாதம் 17ஆம் தேதியன்று வெளியாவதால், தயாரிப்பாளர்களும், பார்வையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் இந்த தடருக்கான பிரத்யேக திரையிடலை, இதனை உருவாக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களுடைய தொழில்துறை நண்பர்களுக்காக மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆர். பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், நிவேதிதா சதிஷ், தொடரின் இயக்குநர்களான பிரம்மா மற்றும் அனுசரண் ஆகியோருடன் விஜய் சேதுபதி, எஸ். ஜே. சூர்யா, ஹன்சிகா மோத்வானி, நிவேதா பெத்துராஜ், அதிதி பாலன், லொஸ்லியா, ரம்யா பாண்டியன், கௌரி கிஷன், மைனா, தர்ஷா குப்தா, அதுல்யா, யாஷிகா ஆனந்த், பிரசன்னா, சினேகா, சாந்தனு, ‘ஜெய்பீம்’ புகழ் மணிகண்டன் ஆகிய திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் திரைத்துறை சேர்ந்த இயக்குநர்களான சந்தானபாரதி, நந்தினி, சுதா கொங்கரா, விஷ்ணுவர்தன், பாலாஜி தரணிதரன், சீனு ராமசாமி, விஜய் சந்தர், அறிவழகன், கல்யாண், விருமாண்டி, ரோஹின், முரளி கார்த்திக், சஞ்சய் பாரதி ஆகியோர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, தயாரிப்பாளர்கள் ராஜசேகர், சசிகாந்த், சதீஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்காரணமாக பிரத்தியேக திரையிடல் முழுவதும் நேர்மறையான அதிர்வலைகள் நிறைந்திருந்தது. இத்தொடரை உருவாக்கிய படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி மீது அன்பு கொண்டவர்களுக்காகவும் இந்த திரையிடல் நடைபெற்றது. தொடரை கண்டு ரசித்த அனைவரும் தங்களது நேர்மறையான விமர்சனங்களால் படைப்பாளிகளையும், படக் குழுவினரையும், தயாரிப்பாளரையும் பாராட்டி மகிழ்ந்தனர்.

‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர் அமேசான் பிரைம் வீடியோவின் முதல் நீண்ட வடிவிலான தமிழ் ஒரிஜினல் தொடர். ஜூன் 17ஆம் தேதியன்று திரையிடப்படும் இந்த ‘சுழல் -தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர், முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகி, நம் மனதை கவர தயாராக இருக்கிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments