கமல்ஹாசன் ’விக்ரம்’ படத்தில் சூர்யா..! ஆச்சரியத்தில் படப்பிடிப்பு தளம்.
கமல்ஹாசன் ’விக்ரம்’ படத்தில் சூர்யா ஆச்சரியத்தில் படப்பிடிப்பு தளம்.
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் என்ற செய்தி ஏற்கனே அறிந்ததே, சூர்யா மற்றும் கமல்ஹாசன் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் இருவரும் இணைந்து படம் நடித்ததில்லை. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. விக்ரம் படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக விக்ரம் அணிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் பல முன்னனி கதாநாயகர்கள் இருப்பதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன, மேலும் படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிக அளவில் உருவாகி உள்ளது, சமீபத்தில் ‘விக்ரம்’ படப்பிடிப்பில் சூர்யா நடித்து வந்த செய்தி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது குழுவினர் படப்பிடிப்பில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ‘விக்ரம்’ படப்பிடிப்பில் சூர்யாவும், கமல்ஹாசனும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி பரவி வருகிறது.