Shopping Festival at Phoenix Market City, Chennai: It was inaugurated by famous actor Huma Qureshi
சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஷாப்பிங் திருவிழா:
பிரபல நடிகர் ஹுமா குரேஷி துவக்கி வைத்தார்
* வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 மாத ‘பீனிக்ஸ் ஷாப்பிங் திருவிழா 2023’ கோலகலமாக துவங்கியது
* பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பம்பர் பரிசுகளுடன் ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது
சென்னை, ஜூன் 16–
சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றாக திகழும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இந்த பருவகாலம் முடிவதையொட்டி வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிரமாண்ட ஷாப்பிங் திருவிழா துவங்கியது.
கோலகலமான இந்த ஷாப்பிங் திருவிழாவை தேசிய அளவில் புகழ்பெற்ற நடிகை ஹுமா குரேஷி துவக்கி வைத்தார். இவர் கேங்க்ஸ் ஆப் வாஸ்ஸேபூர், ஜாலி எல்எல்பி, மகாராணி வெப் சீரிஸ் மற்றும் மோனிகா ஓ மை டார்லிங் போன்ற சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது துவங்கி உள்ள இந்த ஷாப்பிங் திருவிழா அடுத்த 3 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய ஆடைகள் மற்றும் பொருட்களை சலுகை விலையில் வாங்கலாம். இந்த பருவகாலம் முடிவதையொட்டி பல்வேறு பிராண்டுகள் பல சலுகைகளை அறிவித்துள்ளன. இதில் அற்புதமான பம்பர் பரிசுகளுடன் ஏராளமான சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கவும், தங்களுக்கு பிடித்தமான நடிகையை பார்ப்பதற்கும் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது நடிகை ஹுமா குரேஷி, சென்னையில் தனக்கு கிடைத்த அனுபவங்கள், ஷாப்பிங் செய்வதற்கான இடங்கள், தனக்கு பிடித்த படங்கள், தான் நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுடன் அவர் கலந்துரையாடினார். 3 முறை பிலிம்பேர் விருது வென்ற அவர், மாலில் உள்ள சில கடைகளுக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடி அங்குள்ளவர்களையும் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மோட்டார் சைக்கிள் சாகச வீரர்கள் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்களில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சி பார்வையாளர் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இன்று (16–ந்தேதி) துவங்கிய இந்த ஷாப்பிங் திருவிழா வரும் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது.
இந்தக் காலக்கட்டத்தில் இங்குள்ள 300க்கும் பிராண்டுகள் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 15 ஆயிரம் ரூபாய்க்கு ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தினந்தோறும், வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் பம்பர் பரிசுகள் அதாவது பிஎம்டபிள்யூ பைக், ஐபோன் – 14, சோனி பிளே ஸ்டேஷன் 5, ஐபேட், ஏர் பாட்ஸ், ப்ளூடூத் ஸ்பீக்கர்ஸ், ஓட்டலில் தங்குவதற்கான இலவச கூப்பன்கள், வெள்ளி காசு, மார்க்ஸ் & ஸ்பென்சரின் – பரிசு பொருட்கள் மற்றும் பரிசு கூப்பன்கள் மற்றும் 5 லட்சத்திற்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 14, 256ஜிபி உடன் மற்றும் 1 லட்சத்திற்கு ஷாப்பிங் செய்பவர்களுக்கு வைர மோதிரம் பரிசு ஆகியவை வழங்கப்படுகிறது.