Sam CS has composed the music for the web series ‘The Night Manager’

*’தி நைட் மேனேஜர்’ எனும் இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி எஸ்*

*இந்தி இணைய தொடருக்கு இசையமைத்திருக்கும் சாம் சி. எஸ்.*

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான சாம் சி. எஸ், இந்தியில் வெளியாகவிருக்கும் ‘தி நைட் மேனேஜர்’ எனும் இணையத் தொடருக்கு இசையமைத்திருக்கிறார்.

‘தி நைட் மேனேஜர்’ எனும் பெயரில் ஆங்கில மொழியில் உருவாகி ஹாலிவுட்டில் வெளியான தொலைக்காட்சி தொடர் ‘தி நைட் மேனேஜர்’. ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்தத் தொடர் 2016 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திர நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த தொடருக்கு தமிழ் திரையுலகினைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளரான சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

‘விக்ரம் வேதா’ எனும் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு இசையமைத்து பாலிவுட் திரையுலகிலும் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற சாம் சி எஸ், ‘தி நைட் மேனேஜர்’ எனும் இந்தி இணைய தொடருக்கு திறமை வாய்ந்த பல சர்வதேச இசை கலைஞர்களின் ஒத்துழைப்புடன் பின்னணி இசையமைத்திருப்பதால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments