Lip Lock-க்கு Ok சொன்ன நடிகை ப்ரியா பவானி சங்கர்..!
Lip Lock-க்கு Ok சொன்ன நடிகை ப்ரியா பவானி சங்கர்..!
மொழி, அபியும் நானும், காற்றின் மொழி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராதாமோகன் தனது அடுத்த படைப்பை பொம்மை என்ற தலைப்பில் வெளியிட இருக்கிறார். அதன் முன்னோட்டம் நேற்று வெளியானது. மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் பொம்மை முன்னோட்டம் அதே அளவுக்கு விமர்சனங்களையும் மீம்களையும் வாரி குவித்துள்ளது. பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். பொம்மையை வைத்து ஒரு தனி மனிதன் அதை எப்படி உயிருள்ள பொருளாக பார்க்கிறான் அதனுடன் எப்படி எல்லாம் தனது கனவுகளை கொண்டாடுகிறான் என்பது தான் படத்தின் மையக்கரு அதில் திரில்லர் கலந்த திரைக்கதையை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராதாமோகன். பொம்மையாக ப்ரியா பவானிசங்கர் நடித்திருப்பது மட்டுமல்லாமல் முன்னோட்டத்தில் லிப் லாக் போன்ற காட்சிகள் பிரியாவா என்று அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். ஒரு புறம் பிரியாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள் மறுபுறம் அவர் அப்படியெல்லாம் நடித்திருக்க மாட்டார் என்றும் அதும் வெறும் கிராப்பிக்ஸ், கிரீன் மேட்டில் எடுத்தது என்றும் மாறி மாறி பேசி வருகிறார்கள். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மிர்ச்சி சிவசங்கரி நிகழ்ச்சியில் ப்ரியா பவானி சங்கரிடம் பிக்னி அல்லது முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் பிக்னி உடையில் நடிப்பது முடியாதது, ஆனால் அதை ஒப்பிடும் போது முத்தக்காட்சிகளிலே நடிப்பேன் என்று கூறினார். தற்போது பொம்மை படத்தில் நடித்தும் காட்டிருக்கிறார். இப்படி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மாண்டுட்டிருக்க ப்ரியாவோ கண்டும் காணாத மாறி இருந்துவருகிறார். அதற்கு காரணம் இது தானாம்.