Nayanthara Vignesh Shivan marriage planning schedule
*மகாபல்லபுரத்தில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வருகின்ற 9ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம் நடைப்பெறுகிறது.
*திருமணத்திற்கு தேவையான உடைகள், அலங்காரங்கள் அனைத்தும் பாலிவுட்டில் கத்திரினா கைஃப்க்கு பணிபுரியும் மும்பை டீம் ஆனா (shaadi squad) தான் நயந்தாரவின் திருமணத்திற்கு காஸ்டியூம் அண்ட் டிசைன் செய்றாங்க.
*திருமணத்திற்கு காதல் ஜோடிகளுக்கு மட்டும் பிரத்யேக ஆடை அலங்காரங்கள் செய்யவில்லை, அவர்களை சார்ந்தவர்களுக்கும் அவர்களின் ரவுடி பிக்சர்ஸ் டீம்களுக்கும் ஆடை அலங்காரங்கள் மும்பை டீம் தான் செய்கிறார்கள். அவர்கள் சொல்லக்கூடிய வடிவமைக்கின்ற ஆடைகள் அவர்களுக்கு தகுந்தார் போல் கொஞ்சம் எலைட்டாகவே காட்டும் அளவுக்கு இருக்குமாம்.
*மெகந்தி விழா இன்று மாலை தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைப்பெறும் திருமண விழாவில் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அனுமதி என்று ஸ்ரிட்டாக சொல்லிட்டார் விக்னேஷ் சிவன்.
*நயந்தாராவின் திருமணத்தை ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்ல் ஒளிப்பரப்பு செய்ய ஒப்பந்தம் செய்துருக்கிறார்கள்.
*திருமணத்தை ஒரு திரைப்படத்தை போல வெளியிட முடிவு செய்துள்ளார் நயந்தாரா. இயக்குநர் கெளதம் மேனன் தான் இவர்களது திருமணத்தை இயக்கி ஒரு திரைப்படத்தை போன்று ஓடிடியில் வெளியிடுகிறார்.
*ஒட்டுமொத்த செலவும் சுமார் இரண்டு கோடி செலவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் நெட்பிளிக்ஸ்.
*மூன்று நாட்கள் நடைப்பெறும் திருமணத்தை இருவரின் பேட்டிகளோடு இணைந்து வெளியிடப்போவதாக திட்டமிட்டுள்ளார் இயக்குநர் கெளதம் மேனன்.
*திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்கு பிறகு ஜூன் 11 ஆம் தேதி அன்று பத்திரிக்கை மற்றும் ஊடகம், இணையதள நண்பர்களை சந்தித்து இருவரும் அவர்களுடன் இணைந்து மதிய உணவு சாப்பிடுவதாக இன்று நடைப்பெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.