நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்
நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் தோல் பராமரிப்பு தயாரிப்புகள்
நடிகை ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தும் ‘பி எக்ஸ் எஸ் லைன் ’
நடிகை ஸ்ருதிஹாசன், பல்ப் எனும் நிறுவனத்துடன் இணைந்து தோல் பராமரிப்பிற்கான புதிய தயாரிப்புகளை PXS Line எனும் பெயரில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
எங்களுடைய தயாரிப்புகள் உங்களுடைய சருமம் எவ்வளவு பிரகாசமாக இருக்கும் என்பதை பற்றியதல்ல. ஒரு பிரபலத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பதை பற்றியதும் அல்ல. உங்களுடைய உண்மையான தோல் மீது நீங்கள் எவ்வளவு தூரம் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்பதை பற்றியது. நடிகை ஸ்ருதிஹாசன் உடனான எங்களுடைய இந்த ஒத்துழைப்பு வழக்கத்திற்கு மாறான மற்றும் அனைத்து தருணத்திலும் தங்கள் மீது தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நாங்கள் செலுத்தும் அஞ்சலி.
தோல் தொடர்பாக மக்களுக்குத் தெரிந்திருக்கும் விசயங்களையும்,, அதன் மீதான நம்பகத் தன்மையையும் நாங்கள் எப்போதும் கொண்டாட விரும்புகிறோம். நடிகை ஸ்ருதிஹாசன், ஸ்டைல் ஐகான், ராக்ஸ்டார், பெண்ணியவாதி மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர் என பன்முக தன்மையுடன் வலம் வருவதுடன் தொடக்கத்திலிருந்தே பல எதிர்பார்ப்புகளை மீறி செயல்படுபவர். சமூகத்தின் பார்வையில் மற்றவர்களுடன் பொருந்திக் கொள்வதற்கு மிகவும் வித்தியாசமாக இருப்பதை கண்டறிந்தவர்களுக்கு, இவர் எப்போதும் ஒரு உத்வேகம் அளிக்கும் முன்மாதிரியாக இருப்பவர். அத்துடன் அச்சமின்றி, துணிச்சலுடன் இயங்கி வருபவர்களின் அடையாளமாகவும் இவரைக் குறிப்பிடலாம்.
எங்களுடைய கூட்டுப் பணி , கடந்த ஓராண்டு காலமாக செயல்பாட்டில் இருக்கிறது. தொற்றுநோய் காலகட்டத்திலும், எங்களுடைய தயாரிப்புகளை மேம்படுத்துவது குறித்தும், அதற்கு இறுதி வடிவம் கொடுத்து வெளியிடுவதிலும் மகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறோம். இது ரசிகர்களுக்கும் சென்றடையும் என நாங்கள் நினைக்கின்றோம்.” என்றனர்.
இதுதொடர்பாக நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” பல்ப் உடனான என்னுடைய ஒத்துழைப்பின் மூலம் நான் யார்? நான் என்ன விரும்புகிறேன்? நான் எதை நம்புகிறேன்? என்பதை பிரதிபலிக்கிறது. இந்த தயாரிப்புகளின் ஒவ்வொரு பகுதியையும் சிறப்பாக கையாளவும், வடிவமைக்கவும் பல்பு குழுவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இதை உருவாக்க எனக்கு நேரம் கிடைத்தது. மேலும் இந்த தயாரிப்புகள் அனைத்தையும் நீங்கள் விரும்புவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இதனிடையே நடிகர் பிரபாஸ் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ படப்புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் ‘சலார்’ படத்திலும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் அவரின் 154 வது படத்திலும்,, பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத புதிய படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.