Maamanithan Movie Review
தகப்பன் தோத்த ஊர்ல பிள்ளைகள் ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். இப்படி எதார்த்தமா பேசுறதலாம் ஒவ்வொரு இடத்தலயும் ரொம்பவே வலிமையா சொல்லிருக்கிற விதம் மாமனிதன் படத்தோட எமோஷ்னல் பலம். விஜய்சேதுபதி எப்பயும் மாறி தன்னுடைய எதார்த்த நடிப்ப தான் வாழ்ந்த மாறி படத்துல வாழ்ந்துருக்காரு நடிச்சிருக்காரு. காயத்திரிக்கு தேசிய விருது கிடைக்கும் அப்படினு இயக்குநர் சீனுராமசாமி சொன்ன மாதிரியெல்லாம் எக்ஸ்ட்ராடினெரிலாம் சொல்ல முடியாது. அவங்களும் தன்னுடைய கதாப்பாத்திரத்த சட்டிலா கையாண்டிருக்காங்க… முந்தைய படங்களை விட ரொம்பவே நல்ல நடிச்சிருக்காங்கனு சொல்லலாம். சொந்த ஊர்ல ஆட்டோ வாங்குன முதல் நபர் விஜய்சேதுபதி அப்படி தொடங்குற படம் அவர் ரியல் எஸ்டேட்ல நட்டமாகி தன்னுடைய பொண்டாட்டி பிள்ளைகளை சொந்த ஊர்லயே விட்டுட்டு ஊர விட்டே ஓடுறாரு… ஓடுன மனுஷன் சந்திக்கிற விஷயங்கள், அனுபவங்கள் தன்னுடைய சொந்த ஊர்ல இருக்குற தன்னோட குடும்பத்தோட கெதி என்ன ஆச்சு அப்படிங்குறத அழகாகவும் ரொம்ப நேர்த்தியாகவும் சொல்ற கதை தான் மாமனிதன்… இளையராஜா யுவன் சங்கர் ராஜாவேட இசை நல்லாவே வொர்கவுட் ஆயிருக்கு .. மொத்தத்துல இது முழுக்க முழுக்க இயக்குநர் சீனுராமசாமியோட திரைக்கதை பலம்னு சொல்லலாம்… கேமரமேன் சுகுமார் வழக்கம் போல கிரமாத்து ஒட்டுமொத்த அழகயும் காட்சி படுத்திருக்காரு, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இப்படி மாமனிதன் படத்துல இருக்குற ஒவ்வொருத்தரும் படத்துக்கு பலம் சேர்த்துருக்காங்க.. மொத்தத்தில் மாமனிதன் மகா நடிகன்