‘Laandhar’ starring Vidharth -Swetha Dorathy in the lead is an innovative suspense psycho thriller

எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜிசலீம் இயக்கத்தில் விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாந்தர்’

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபரான பத்ரி தனது எம் சினிமா பேனரில் தயாரிக்க சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லாந்தர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

விதார்த், சுவேதா டோரத்தி,விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கும் ‘லாந்தர்’ திரைப்படம் –
புதுமையான மற்றும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் ஆக புதிய கோணத்தில் உருவாக உள்ளது.

இயக்குநர் சாஜிசலீமின் இரண்டாவது படம் ‘லாந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம்குமாரிடம் ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் இயக்குநர் செல்லா அய்யாவு உடன் ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திலும் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய இவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படைப்பான ‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

‘லாந்தர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் சாஜிசலீம், “இது வரை யாரும் சொல்லாத சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக உள்ளது ‘லாந்தர்’. இந்த புதுமையான கதைக்களத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனது முதல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என் மீதும் கதை மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பத்ரி அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.

‘லாந்தர்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஞானசௌந்தர் கையாள உள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரவீன் இசையமைக்கிறார். படத்தொகுப்பை ஜெரோம் ஆலனும், சண்டைக் காட்சிகளை விக்கியும், கலை இயக்கத்தை தேவாவும் கையாள உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை: ஏ ஆர் சந்திரமோகன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜிசலீம் இயக்கத்தில் விதார்த் நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லரான ‘லாந்தர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments