“Jawaan” Movie Preview Released | Shah Rukh Khan’s much awaited film is going viral on the internet

“ஜவான்” திரைப்பட ப்ரிவ்யூ வெளியானது – ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் ப்ரிவ்யூ இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.

ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜவான் திரைப்படத்தின் ப்ரிவ்யூ இன்று வெளியாகி, இணையத்தை புயலாக தாக்கியுள்ளது. சமூகத்தில் உள்ள தவறுகளை சரிசெய்யும் ஒரு மனிதனின் உணர்ச்சிகரமான பயணத்தை, கோடிட்டுக் காட்டும் ஒரு உயர்தரமான அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் இருக்கும் என்பதை, இந்த ப்ரிவ்யூ உறுதி செய்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் நிறைந்த ப்ரிவ்யூ காட்சி, படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்குத் எடுத்து சென்றுள்ளது. பார்வையாளர்களை வசீகரித்துள்ள இந்த ப்ரிவ்யூ ஒரு அசாதாரண சினிமா அனுபவத்தை உறுதியளிக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சிகளின் சரியான கலவையை ஒன்றிணைத்துள்ள, ஜவான் ப்ரிவ்யூ பிரமிக்க வைக்கும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. ப்ரிவ்யூ உடைய ஒவ்வொரு ஃபிரேமும் கவனத்தை ஈர்ப்பதுடன் ஜவான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது.

ப்ரிவ்யூ கிங் கானின் குரலில் தொடங்குகிறது, அடுத்து என்ன எனும் ஆர்வத்தை உருவாக்குகிறது. ரசிகர்களுக்கு கிடைத்த மிகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், அவர்கள் இதுவரை பார்த்திராத அவதாரங்களில் SRK-ன் பல்வேறு தோற்றங்களை இந்த ப்ரிவ்யூ காட்டுகிறது. இந்த ப்ரிவ்யூ இந்திய சினிமா முழுவதிலுமிருந்து பல முன்னணி நட்சத்திரங்களை ஒருங்கிணைத்து காட்டுகிறது. வெடித்து சிதறும் ஆக்‌ஷன் காட்சிகள், பிரமாண்டமான பாடல்கள் மற்றும் பிரபலமான ரெட்ரோ ட்ராக் “பாட்டு பாடவா” பாடலுடன் SRK இன் அசத்தலான நடிப்புடன் ப்ரிவ்யூ முழுவதும் பல ஆச்சரியங்கள் நிறைந்துள்ளது.

திரைத்துறையில் தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்குவதில் பெயர் பெற்ற அட்லீயின் இயக்கத்தில், சமீப காலங்களில் வெற்றிகரமான இசை ஆல்பங்களை வழங்கிய அனிருத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும் பாடல்களும் உற்சாகத்தை கூட்டுகின்றன. மேலும் ஜவான் திரைப்படத்தில், கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட, மிகவும் பிரபலமான இசை கலைஞரான ராஜா குமாரியின் ‘தி கிங் கான் ராப், ஒரு உயர் ஆற்றல் மற்றும் வசீகரிக்கும் பாடல், இந்த ப்ரிவ்யூவில் இடம்பெற்றுள்ளது.

ஜவான் இந்திய ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்படுகிற திரைப்படமாகும் , மேலும் இதுவரை அல்லாத அளவிற்கு மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இந்திய திரைப்படம் ஆகும், இந்தப் படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர், ஷாருக்கான் முதல் தீபிகா படுகோன் , நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், மேலும் சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா, லெஹர் கான், ஆலியா குரேஷி, ரிதி டோக்ரா, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இத்தனை நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளதால் இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களிடமும் இந்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது கண்டிப்பாக ஒரு பான் இந்திய வெற்றி படமாக இருக்கும்.

ஜவான் படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று என்பதை இந்த ப்ரிவ்யூ உறுதி செய்கிறது. ஆர்வத்தை தூண்டும் போஸ்டர்கள் மற்றும் ஒரு சிறிய டீசர் மூலம் பார்வையாளர்களை எதிர்பார்ப்பை எகிறச்செய்த பிறகு, தற்போது ப்ரிவ்யூ வெளியாகியுள்ளது.

ஜவான் திரைபடத்தை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது , தென்னிந்திய இயக்குநர் அட்லீ இதனை இயக்கியுள்ளார், கௌரி கான் மற்றும் கவுரவ் வர்மா இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்கள் . இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments