Jailer FDFS Movie Review | Rajinikanth | Tamanna Bhatia | Nelson
ஜெயிலர் படத்தின் விமர்சனம்;
படம் பார்க்கலாம வேண்டாம என்பதை எந்த ஒரு தனி நபரின் விமர்சனத்தின் மூலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றில்லை, அவர் அவர் சொந்த விருப்பத்தின் மூலம் மட்டுமே தனிப்பட்ட முடிவு எடுக்க வேண்டும். ஜெயிலர் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்திதில்லை. படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ஜெயிலராக ஒரு குட்டி மாஸான ஃபேல்ஷ் பேக் ரஜினிக்கு இயக்குநர் நெல்சன் கொடுத்திருப்பது, இப்போதைய ரஜினியின் உடல் மொழிக்கு ஏற்ப போதுமானது, மிகச் சரியானதே, ஹூரோனா மாஸ் காட்டி அடித்து நொருக்கினால் மட்டுமே ஹூரோ என்பதில்லை, ஒரு டீம் தான் சொன்னதை கேட்டு வேட்டையாடும் அளவிற்கு தனது வயதிற்கு ஏற்றார் போல் தனது மாஸை காட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஒரு நேர்மையான அப்பாவாக ரஜினிகாந்த் தனது பையனுக்கு இன்ஸ்பெரேஷனாக மாறுகிறார். மகனான வசந்த் ரவி , தான் தான் செய்யும் போலீஸ் வேலைக்கும் தனது குடும்பத்திற்கும் நேர்மையாக இருக்கிறாரே, என்று அம்மாவனா ரம்யா கிருஷ்ணன் நினைக்க, அதற்கேற்றார் அவருக்கு அசம்பாவிதம் நிகழ்கிறது. நான்கு வருடங்களாக சிலைக் கடத்தல் கும்பலை பிடிக்க வசந்த் ரவி போராடுகிறார். சிலைக்கடத்தல் கும்பலிடன் சிக்கிய மகனை காப்பாற்ற ரஜினிகாந்த் என்ன என்ன செய்கிறார் என்பதை கதைக்கேற்றார் போல் திரைக்கதையின் வேகத்தை கூட்டி குறைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன், எதிரிகளை வேட்டையாடும் போதெல்லாம், அனிரூத்தின் பின்னனி இசை, நிச்சயமாக கூஸ் பம்சை ஏற்படுத்தும் என்பது உறுதி, காவாலா பாடல் திரையில் பார்க்கும் போது தமனாவை மறந்து சுனில் காதாப்பாத்திரத்தை ரசிக்க ஆரம்பிக்க தோணும் வகையில் அதன் காட்சிகள் அமைந்திருக்கும். நகைச்சுவையும் கலந்து காவாலா சாங் அமைந்திருப்பது அனைவரும் ரசிக்கும்படி அமைந்திருக்கும். மற்ற பெரிய நடிகர்கள், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரிப், வில்லனாக நடித்திருக்கும் வினாயகன் படத்திற்கு கூடுதல் பலம் எனலாம், ரஜினிகாந்திற்கு உண்டான அதே மாஸை மற்ற மொழி சூப்பர் ஸ்டார்களுக்கும் கொடுத்திருப்பது ரசிக்க வைக்கிறது. மொத்தத்தில் தனது மகனை சிலைக்க்டத்தல் கும்பலிடம் இருந்து டைகர் முத்துவேல் ஆன ரஜினிகாந்த் காப்பாற்றினாரா அல்லது பறிக்கொடுத்தாற என்பதே ஜெயிலர் படத்தின் கதை. மொத்தத்தில் ஜெய்லர் ரசிகர்களுக்கான கொண்டாட்டம்