சிவகார்த்திகேயன் “டான்” திரை விமர்சனம் 9/10
சிவகார்த்திகேயன் “டான்” திரை விமர்சனம்
சிறுவயதிலிருந்தே அப்பாவின் பிடியில் சிவகார்த்திகேயன் கண்டிப்பாக வளர்க்கப்படுகிறார். அப்பா சமுத்திரகனியின் கட்டாயத்தின் பேரில் இன்ஜினீயரிங் காலேஜில் சேர்க்கப்படுகிறார். சிறுவயதிலிருந்தே தான் என்னவாக ஆகப் போகிறோம் என்பதை தேடி வருகிறார். இறுதியில் அவர் நினைத்தது நடந்ததா? தனக்கு என்ன திறமை இருக்கிறது. சிவா ஆசைப்பட்டதை சாதித்தாரா? என்பதே டான் படத்தின் ஒன்லைன். சிவகார்த்திகேயனுடன் இப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, பாலசரவணன், மிர்ச்சி விஜய், சிவாங்கி, காளி வெங்கட், முனிஸ்காந்த் , சமுத்திரக்கனி, எஸ்.ஜே. சூர்யா, என அனைவருக்குமான இடத்தைஉ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பகிர்ந்தளித்துள்ளார். வழக்கம் போல் இல்லாமல் முன் இருந்த விஜய் டிவி சிவகார்த்திகேயனை டான் படத்தில் காணலாம். அதோடு படத்தில் ரய்மிங்,டைமிங்,செண்டிமெண்ட், ஸ்டண்ட் , லவ் என அனைத்து வகையான கலவைகளை அளவாக ரசிக்கும் படி இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
முதல் பாதி முழுக்க காலேஜை சுற்றி நடக்கும் சேட்டைகள் மற்றும் லூட்டிகளால் நிறைந்துள்ளது. காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக அறிமுகமாகும் எஸ். ஜெ. சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே நடக்கும் சண்டைகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. எஸ்ஜே சூர்யாவை வெளியில் அனுப்ப சிவகார்த்திகேயன் போடும் திட்டம், காலேஜ் கல்ச்சுரல் டான்ஸ் என முதல் பாதி எங்கும் போரடிக்காமல் நகர்கிறது. ஜலபுலஜங், ப்ரைவேட் பார்டி என பாடல்கள் விசுவல் ட்ரீட் ஆகா உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்து இந்த படத்தில் ஸ்கோர் செய்வது எஸ்ஜே சூர்யா தான். காலேஜ் டிசிப்ளின் கமிட்டி தலைவராக தொடங்கி பிரின்சிபால் ஆக இந்த கதாபாத்திரத்தை வேறு யாரும் பண்ண முடியாத அளவிற்கு தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இடையில் நடக்கும் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் அழகாக உள்ளது, இருவருக்கும் போடப்பட்ட மேக்கப்கள் அவ்வளவு உறுத்தலாக இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பிளஸ். சிவகார்த்திகேயன் நண்பர்களாக வரும் பால சரவணன், ஆர்ஜே விஜய் மற்றும் சிவாங்கியின் நடிப்பு சுட்டி தனமாகவும் ரசிக்கும் படியும் உள்ளது. இரண்டாம் பாதி முழுவதும் வரும் சூரி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி தன்னுடைய மற்றொரு பெஸ்ட் பெர்பார்மன்ஸை இப்படத்தில் கொடுத்துள்ளார். முதல் பாதி படு ஜாலியாகவும் இரண்டாம் பாதி அதே அளவிற்கு சீரியஸாகவும் நகர்கிறது. தான் என்னவாக ஆகவேண்டும் என்று சிவகார்த்திகேயன் முடிவெடுக்கும் காட்சி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி எமோஷனல் காட்சிகளில் பூந்து விளையாடி உள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் பிரமாதம்.
ஒவ்வொரு கல்லூரி மாணவர்களும் தங்களை கனெக்ட் செய்துகொள்ளும் அளவிற்கு பல காட்சிகள் டான் படத்தில் உள்ளது. அவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைக்களம் நிச்சயம் அவர்களை போய் சேரும். அனிருத்தின் இசையில் டான் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வேற லெவல் ஹிட்டான நிலையில் பி.ஜி.எம்மிலும் அசத்தியுள்ளார்.
படத்தின் பிளஸ்:
கூட்டு முயற்சி மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பு சிபியின் திரைக்கதை.
படத்தின் மைன்ஸ்:
கதை நீளமாக இருப்பது தான், ஆனால் அதில் சளிப்பொன்றும் தட்டவில்லை. மொத்தத்தில் இந்த டான் சிவகார்த்திகேயனின் வசூல் மழையில் மற்றொரு டானாக அமையப்போகிறது.
தாய் தந்தை இருக்கும் பொழுதே அவர்களை புரிந்துக்கொண்டு கொண்டாடுங்கள்.. படத்தை பார்த்த அனைவரும் கண்ணீருடன் வெளியே வருவது இயக்குநரின் சக்ஸஸ்… சிபி சக்கரவர்த்தி முதல் பாலிலயே சிக்ஸர் அடித்திருக்கிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்..