Captain Vijayakanth released the Padai Thalaivan first look poster | Shanguma pandiyan
நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும், “படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் இன்று வெளியிட்டார் !!
VJ கம்பைன்ஸ் ஜெகநாதன் பரமசிவம் மற்றும் சுமீத் ஆர்ட்ஸ் சுமீத் சாய்கல் வழங்க, Directors Cinemas தயாரிப்பில், U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்சன் திரைப்படம் “படை தலைவன்”. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோவை கேப்டன் விஜயகாந்த் தனது பிறந்தநாள் தினமான இன்று வெளியிட்டார். நிகழ்வின் போது திருமதி பிரேமலதா விஜயகாந்த், திரு விஜய பிரபாகரன், “படை தலைவன்” படத்தின் நாயகன் சண்முக பாண்டியன், இயக்குனர் U அன்பு மற்றும் படக்குழுவினர் உடனிருந்தனர்.
“படை தலைவன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ் விடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் “படை தலைவன்” படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. “வால்டர்” மற்றும் “ரேக்ளா” பட இயக்குநர் U அன்பு கதையில், “நட்பே துணை” இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு திரைக்கதை வசனத்தில், இதுவரை திரையில் கண்டிராத காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை, இப்படத்தில் பதிவு செய்யப்படவுள்ளது.
மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர், ரிஷி ரித்விக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப குழு விபரம்
கதை இயக்கம் – U அன்பு
இசை – இசைஞானி இளையராஜா
திரைக்கதை வசனம் – பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு – S R சதீஷ்குமார்
படத்தொகுப்பு – இளையராஜா
ஸ்டண்ட் – மகேஷ் மேத்யூ
கலை இயக்கம் – P ராஜு
ஸ்டில்ஸ் – சக்திபிரியன்
மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா AIM
பப்ளிசிட்டி டிசைனர் – தினேஷ் அசோக்