Biggest Stars from eight Film Industries PAN India ‘Celebrity Cricket League’ (CCL)

8 மாநில திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது !!

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நிகழ்வில் இணைவது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாகும்.

இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது, இது தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்கள் 19 ஆட்டங்களை நடத்தவுள்ளன

இந்த 8 அணிகளுள் ஒன்று CCL கோப்பையை வெல்லும்.

மும்பை ஹீரோஸ் பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக், சென்னை ரைனோஸ் கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், தெலுங்கு வாரியர்ஸ் அணியில் வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர். மேலும் மனோஜ் திவாரி போஜ்புரி தபாங்ஸ் கேப்டனாகவும், மோகன் லால் இணை உரிமையாளராக உள்ள கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கேப்டனாக குஞ்சாக்கோ போபன் பங்கேற்க, போனி கபூர் உரிமையாளரான பெங்கால் டைகர்ஸ் அணிக்கு கேப்டனாக ஜிசுசென் குப்தா, கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப், பஞ்சாப் தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூத் பங்கேற்கின்றனர்.

120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதால் இந்த போட்டிகள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற ஸ்டேடியங்கள் முந்தைய சீசன்களில் நிரம்பி வழிந்தன. இந்த முறை மற்ற இடங்களிலும் கூட்டமாக ரசிகர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிகள் 7 வெவ்வேறு ZEE டிவி நெட்வொர்க்குகளில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும். Zee Anmol Cinema சேனல் அனைத்து 19 CCL கேம்களையும் ஒளிபரப்பவுள்ளது.

மும்பை ஹீரோஸ் போட்டிகள் & பிக்சர்ஸ் இந்தி, பஞ்சாப் தி ஷேர் போட்டிகள் PTC பஞ்சாபியிலும், தெலுங்கு வாரியர்ஸ் போட்டிகள் Zee சினிமாவிலும், சென்னை ரைனோஸ் போட்டிகள் Zee திரையிலும், கர்நாடகா புல்டோசர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ் போட்டிகள் ஜீ பங்களா மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் போட்டிகள் ஃப்ளவர்ஸ் டிவியிலும் ஒளிபரப்பப்படும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments