Ayali web series movie review

“அயலி” – பார்க்க வேண்டிய படம் – திரை விமர்சனம்!

எஸ். குஷ்மாவதி தயாரிப்பில் முத்துக்குமார் டைரக்‌ஷனில் உருவாகியிருக்கும் இணைய தொடர் ‘அயலி’. இதில் அறிமுக நடிகை அபி நக்சத்ரா முக்கிய பாத்திரத்தில் நடிக்க அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி லிங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மொத்தம் 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் இன்று (ஜன26) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பருவமெய்தியவுடன் பெண் குழந்தைகள் திருமணம் செய்துவைக்கப்பட வேண்டியவர்கள் என்று பழமையான பழக்கவழங்கங்களில் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கும் கிராமம், இந்த பாரம்பரிய மரபை கடைபிடிக்காவிட்டால் கிராம தெய்வமான அயலி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்ற நம்பிக்கை, இவற்றை தகர்த்தெறிந்து மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய போராடும் இளம் சிறுமி என்ற கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரானது, பெண்களின் கல்வி மற்றும் அதிகாரம் மற்றும் அவர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடும் வயதுக்கு வந்த பெண்களின் ஒரு கதையாகும்”

மொத்தம் 8 பாகங்களாக வரும் இந்த web series மிகவும் யதார்த்தமான திரைக்கதையில் மிகவும் கலகலப்பாக அதே சமயததில் எல்லோரின் மன ஓட்டத்தை சிந்திக்க வைக்கும் கதையாக அமைத்துள்ளார் இயக்குனர் முத்துகுமார்.இந்த தொடர் பெண்களுக்கு மிக முக்கியமான ஒரு படம் மிக எளிமையான கதையை எடுத்து கொண்டு அற்புதமான அழுத்தமான திரைக்கதை மூலமாக வெற்றிபெற்றுள்ளார் இயக்குனர் முத்துகுமார். குறிப்பாக தமிழ் செல்வி கதாபாத்திரம் மற்றும் அம்மா அப்பா கதாபாத்திரமும் நம்மை மிகவும் பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள் அதோடு பனையூர் கிராம மக்களாக நடித்து இருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் இயக்குனர் மிக சிறப்பாக அமைத்துள்ளார். இயக்குனர். இந்த படத்தில் இயக்குனர் தமிழர்கள் பொதுவாக பெண்கள் மாதவிடாய்க்கு பல மூடநம்பிக்கை பற்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல ஒரு கருத்தை ஆர்ப்பாட்டமல் இல்லாமல் சொல்லி இருப்பது நம்மை யோசிக்க வைக்கிறது.

இன்றும் சமுதாயத்தில் குறிப்பாக கிராமத்தில் பெண்கள் நிலையை மிகவும் நேர்த்தியாக தோல் உரித்து காட்டியுள்ளார் இயக்குனர் அதோடு மாதவிடாய் காலத்தில் விளக்கு ஏற்றிவது கோவில்குள் போகக்கூடாது என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை என்பதை மிகவும் அழகாக கூறியுள்ளார் இயக்குனர். படத்தின் வசனங்கள் சிறப்பாக உள்ளது.

தமிழ்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் அபிநயா 15 வயது கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார் மிக யதார்த்தமான நடிப்பு நடிப்பு ராட்சசி என்றும் சொல்ல கூடிய அளவில் நடித்து இருக்கிறார்.அவர் மட்டும் இல்லை படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அப்படி ஒரு அருமையான நடிப்பு லிங்கா மேனரிசம் மீண்டும் ஒரு சிறந்த வில்லன் என்பதை நிரூபித்து உள்ளார் அனுமோல், அருவி பாலா படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இயக்குனரின் மிக பெரிய பலம் என்றால் அது ராம்ஜி ஒளிப்பதிவு மற்றும் இசையமைப்பாளர் ரேவா பெண் இசையமைப்பாளர் ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி நம்மை வியக்க வைக்கிறார்.

மொத்தத்தில் அயலி நம்மை ரசிக்க வைக்கிறார் வியக்க வைக்கிறார் சிந்திக்க வைக்கிறார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments