Aha Tamil presents “Udanpaal” creates a record crossing 1 Crore Plus Streaming Minutes

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்த “உடன்பால்” திரைப்படம் !!

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில், டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான “உடன்பால்” திரைப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, 1 கோடி பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

டி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில், சார்லி, ‘சேதுபதி’ பட புகழ் நடிகர் லிங்கா, நடிகை காயத்ரி, நடிகை அபர்னதி, விவேக் பிரசன்னா, KPY தீனா, நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடிப்பில் ஆஹா தளத்தில் வெளியான திரைப்படம் “உடன்பால்”.

குடும்ப பின்னணியில் இன்றைய சமூகத்தில் உறவுகள் பணத்திற்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை அற்புதமான ப்ளாக் காமெடியில் சொல்லியிருந்தது இந்த திரைப்படம். மேலும் இன்றைய சமூகத்தில்
நம் தாய்தந்தையரிடம் நாம் எவ்வாறு நடந்த கொள்ள வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லியுள்ளது இப்படம்.

விமர்சகர்களின் பாராட்டை குவித்த இப்படம், குடும்ப பார்வையாளர்களின் பெரும் வரவேற்பில் ஆஹா தமிழ் தளத்தில் 1 கோடி நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் ஆஹா தளத்தின் குழுவினரோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் நன்றியினை தெரிவித்துள்ளனர்.

நேர்த்தியான குடும்ப பொழுதுபோக்கு அம்சங்களுடன், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளின் கலவையும் இணைந்து உருவாகியிருந்த “உடன்பால்” படத்தின் ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர் செய்திருந்தார், சக்தி பாலாஜி இசையமைக்க, கலை இயக்கத்தை எம் எஸ் பி மாதவன் செய்திருந்தார், படத்தொகுப்புப் பணிகளை ஜி. மதன் செய்திருந்தார்.

தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆஹா டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஒரிஜினல் திரைப்படங்கள், ஒரிஜினல் வலைதளத் தொடர், ஒரிஜினல் நிகழ்ச்சிகள், என பல அசலான ,தமிழர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு அம்சங்களை, உள்ளூர் திறமைசாலிகளுடன் இணைந்து வழங்கி வருகிறது. இத்தளத்தில் வெளியான ‘மாமனிதன்’, ‘குருதி ஆட்டம்’, போன்ற தமிழ் திரைப்படங்கள், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனையை படைத்தது. சமீபத்தில் வெளியான ‘ஜீவி’, ‘ஜீவி 2’ படங்கள் மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில் தற்போது உடன்பால் படம் 1 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. வருகிறது. உலகளாவிய தமிழர்களுக்கான நூறு சதவீத பிரத்தியேக பொழுதுபோக்கு அம்சங்களை அனைவரும் ரசிக்கும் வகையில் தந்து வருகிறது ஆஹா தமிழ் தளம் .

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments