A new comedian arrival in tamil movie Lal Salaam 2023
லால் சலாமில் கலக்கும் காமெடி நடிகர் தங்கதுரை
காமெடி நடிகர் தங்கதுரை விஜய் டிவியில் அறிமுகமாகி தற்பொழுது பல படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கிட்டதட்ட 25 படங்களுக்கு மேல் படங்களில் நடித்திருக்கும் தங்கதுரை தற்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து, படக்குழு அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படத்தை பதிவு செய்திருப்பது படக்குழுவினரிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கக்கூடிய லால் சலாம் 30 நாட்கள் படப்பிடிப்பு சிறப்பாக நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. செஞ்சி , திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு படமாக்கப்பட்டு முடிவு பெற்றது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வருகின்ற மே மாதம் முதல் வாரத்தில் நடத்த இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
இரண்டாம் கட்டப்படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் 30 நாட்கள் கால் ஷீட் ஒதுக்கியுள்ளார். படத்தில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் தோன்றிய நடிகர் தங்கதுரை சால் சலாம் படத்தில் முழு நீள திரைப்படத்தில் தோன்றுவதோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனக்கு அதிக ஊக்கத்தை தருவதோடு மட்டுமல்லாமல் அதிகமாக பாராட்டுவது தனக்கு உந்துதலை தருவதாக கூறினார். அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் நடிக்கயிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு, சூப்பர் ஸ்டாருடன் ஒரு காட்சி இருந்தாலே போதும் என்பது கனவு, ஆனால் தற்போது அவருடன் சேர்ந்து நடிப்பது, கனவை நனவாக்கும் விதமாக, கனவு நனவாகும் நாள் வரப்போகிறது என்று நினைத்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்கிறார். இதற்கு உறுதுனையாக இருந்த இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு பெரிய நன்றி என்றும் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணக்கூடிய இடத்தில் தான் இருக்கிறது. தற்போது நகைச்சுவை நடிகர்கள் ஹூரோவாக பரினாமமாகும் சூழல் தான் தற்போது அதிகம் உள்ளது. இதையடுத்து அந்த வெற்றிடத்தை நிரப்பும் விதமாக தங்கதுரை இருப்பார் என்றும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுத்து வருகிறார்கள்.. தொடர்ந்து அஜித், சந்தானம், பிரபு தேவா , ஹரிஸ் கல்யாண், விஷ்ணு விசால் போன்ற நடிகர்களின் வெற்றிப்படங்களில் நடித்து வரும் தங்கதுரை, லால் சலாம் திரைப்படத்திலும் தனது வெற்றிக்கூட்டணியை தொடர்வதோடு, இனி வரும் படங்களில் முழு நீள நகைச்சுவை நடிகனாக வலம் வருவார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..