Amaram Movie Audio & Trailer Launch | Grand Event Highlights


” அமரம் ” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், இயக்குனர் திரு அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்
” அமரன் “.

மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஆகஸ்ட் 28-ல் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் C.R. ராஜன் பேசியதாவது..,

‘அமரம்’ திரைப்படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் ஒரு நல்ல படத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் அதற்கு கலைஞர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைய வேண்டும். அது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில், ‘அமரம்’ படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பும் அர்ப்பணிப்பும் அமைந்துள்ளது.

இயக்குநர் அருள் கிருஷ்ணன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். அவர்களுடைய உழைப்பினால்தான் இந்தப் படம் சாத்தியமாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் என்னிடம் கூறியவுடனேயே இப்படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. முதலில் ஒரு ரீமேக் படம் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதையைக் கேட்டவுடன் இந்தப் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.

ஒரு கட்டத்தில் என்னால் படத்தில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டபோது, துரை பாண்டி இந்தப் படத்தின் பணிகளை முழுமையாக கவனித்துக் கொண்டார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். கதாநாயகன் தேஜஸ் ராஜன் மற்றும் கதாநாயகி ஐரா அகர்வால் இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அமரம்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தை பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும். நன்றி!”

நாயகன் தேஜஸ் ராஜன் பேசியதாவது..

“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். எங்களுடைய படைப்பு தற்போது உங்கள் முன்னால் வந்துள்ளது. படத்தின் டிரெய்லர் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்தத் திரைப்படத்தை நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு செய்தோம். புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலில் அதிகாலை 4 மணிக்கும், எண்ணூர் பீச்சிலும் என பல்வேறு இடங்களில் பல கஷ்டங்களுக்கிடையே இந்தப் படத்தை படமாக்கினோம்.

இந்தப் படத்திற்காக 330-க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களது முழு அர்ப்பணிப்புடன், உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அருள் கிருஷ்ணன் இந்தப் படத்தை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றி விழாவில் என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் குறித்து விரிவாகப் பேசுகிறேன். இப்படத்திற்கு உங்கள் அனைவரும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி!”

படத்தின் இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசியதாவது..,

“என்னுடைய திரைப்பயணம் என்பது மிக நீண்ட பயணம். நான் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். என்னுடைய ஊரிலிருந்து இதுவரை யாரும் சினிமாவிற்குள் வந்ததில்லை. எனது ஊருக்கு சினிமா என்பது புதிதான விஷயம். நான் கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் சார் போன்றவர்களைப் பார்த்துதான் படத்துறைக்குள் வந்தேன். அவர்களைப் போல் படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

தமிழ் சினிமா இந்திய அளவில் பல்வேறு துறைகளிலும் சிறந்து வருகிறது. தேசிய விருதுகள் பெறுவதிலும், எமோஷனல் படங்களை உருவாக்குவதிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். ஆனால் ஆக்ஷன் படங்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை நாம் தவறவிட்டு வருகிறோம்.

அதனால், ஆக்ஷன் படத்தை மையமாக வைத்து, ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களைப் பார்த்து, அதனால் இன்ஸ்பயர் ஆகி, அதுபோன்ற ஒரு மிகச்சிறந்த திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆக்ஷன் படங்களுக்கு மிகச்சிறந்த திரைக்கதை மிகவும் முக்கியம். ஆனால் அந்தப் படத்தை உருவாக்குவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் அந்த முயற்சியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பின்னர் என்னுடைய மேனேஜர்கள் மூலம் வேறு சில கதைகளைச் சொல்லியிருந்தேன். அப்போதுதான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இந்தக் கதையைக் கேட்டு, ‘இதை நாம் தயாரிக்கலாமே’ என்று கூறினார்.

கதாநாயகர்கள என்னால போய் ரீச் பண்ண முடியல, காரணம் அவங்களுக்கு எக்கச்சக்க கமிட்மென்ட் இருக்கு. அப்போ நடிகர் கார்த்தி சார் ஒரு இன்டர்வியூல சொன்ன மாதிரி, அத ஒரு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு நம்மளே நம்மள முதல்ல வெளி கொண்டு வரணும். அவங்கள மாதிரி ஒரு நடிகருக்கு எழுதுன கதையிலயும், நல்ல கதையா, நல்ல திரைக்கதையா இருக்குற பட்சத்துல, ஒரு புதுமுக நடிகர கூட போட்டு அந்த அளவுக்கு ஒரு ஹிட்ட குடுக்க முடியும். அந்த அளவுக்கு ஒரு படத்த எடுத்துற முடியும். ஒரு குறைந்த முதலீட்டுலயே, குறைந்த பட்ஜெட்லயே ஒரு பிரம்மாண்டமான படத்த பண்ண முடியும்னா அதுக்கான ஒரு பெரிய முயற்சிதான், ஒரு உதாரணம்தான் இந்தப் படம். பிரம்மாண்டமா பண்ணிருக்கோம், அதுக்கு நெறைய திட்டமிடல் தான் காரணம்.

(Trident Arts) ரவீந்திரன் சார் அவங்க வந்து இந்தப் படத்த பத்தி சொல்லும்போது, ஒரு ‘புதிய பாதை’, ஒரு ‘சுப்பிரமணியபுரம்’, ஒரு ‘பருத்திவீரன்’ மாதிரி வரும்னு சொன்னாரு. கல்ட் கிளாசிக்கா (Cult classic) இந்தப் படம் வரும்.

இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது.

இந்திய சூழலில் ஒரு ஹீரோவிடம் கதை சொல்லி அவரை படத்திற்குள் கொண்டு வருவது என்பது பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் பெரிய சவாலாக இருக்கிறது. நடிகர் யோகிபாபு என்னுடைய நெருங்கிய நண்பர். ‘ஜுங்கா’ படத்திலிருந்து அவருடன் பணியாற்றி வருகிறேன். அவரை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தபோது, அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் பட்ஜெட் காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. சினிமா சூழல் அப்படித்தான் இருக்கிறது.

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு திரைப்படமாக இருக்கும். இந்தப் படத்திற்காக பலரும் தங்களுடைய சம்பளத்தைப் பெரிதாக எதிர்பார்க்காமல், எனக்காகவும் இந்தப் படத்திற்காகவும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் கண்டிப்பாக உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். இப்போதைக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”

நாயகி ஐரா அகர்வால் பேசியதாவது..,

“இன்று எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். இந்த நாளுக்காக நான் பல மாதங்களாக மிகவும் ஆவலுடன் காத்திருந்தேன். தற்போது எங்களுடைய படத்தின் இசையும் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இது உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்”

படத்தின் கதையை இயக்குநர் அருள் கிருஷ்ணன் தன்னிடம் கூறியபோதே மிகவும் பிடித்திருந்தது ஐரா அகர்வால், அவர் கூறிய விதத்தில் கதையை சிறப்பாக திரையில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

“இயக்குநர் எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து, மிகவும் அழகாக என்னை நடிக்க வைத்தார். அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்தப் படத்தில் எடிட்டர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய அனைவரும் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்”.

என்னுடன் இணைந்து நடித்த கதாநாயகன் தேஜஸ் ராஜனுக்கும் நன்றி, தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றி.“‘அமரம்’ திரைப்படம் நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு நல்ல படைப்பாக இருக்கும். எனவே இந்தப் படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அன்பையும் அளிக்க வேண்டும்” நன்றி.

சிறப்பு விருந்தினர் மாமன்ற நடுவர் டாக்டர் V. ராமராஜ் பேசியதாவது..,

“மக்களுக்காக பேசும் மீடியா துறை நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அமரம்’ படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையை, அவர்களின் வலியை, அவர்களுக்கான நியாயத்தைப் பேசும் படமாக இப்படம் இருக்கும் என்று அறிகிறேன். இப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துச் சென்று உருவாக்கியிருக்கும் படக்குழுவினருக்கும், இதில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லோக் ஆயுக்தா பற்றிய ஒரு விழிப்புணர்வு தமிழகத்தில் இன்னும் போதுமான அளவில் இல்லை. ஊழலுக்கு எதிராக செயல்படும் அமைப்பான லோக் ஆயுக்தா குறித்து தமிழக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழலுக்கு எதிரான ஒரு போரைத் தொடங்க வேண்டும். அந்தப் பயணம் இப்போது ஆரம்பமாகிவிட்டது. அதற்கான பயணத்தில் நாம் அனைவரும் இணைவோம் என்று இந்த விழாவின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

‘அமரம்’ திரைப்படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் அளிக்க வேண்டும். மக்களின் குரலைப் பேசும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். படக்குழுவினருக்கு மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி!”

மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.

தொழில் நுட்ப குழு விபரம்

எழுத்து இயக்கம் – அருள் கிருஷ்ணன்
இசை – மிக்கி ஜெ .மேயர்
பாடல்கள் – சினேகன்,சௌந்தரராஜன். K
ஒளிப்பதிவு – பரத் குமார்
எடிட்டிங் – R. ஸ்ரீராமர்
கலை இயக்கம் – ஜனார்த்தனன்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பூபதி
தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – C.R.ராஜன்.

Traident Arts ரவீந்திரன் இந்த படத்தை இம்மாதம் 28ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.