Arimapatti Shakthivel movie review

அரிமாபட்டி சக்திவேல் திரை விமர்சனம்!
சாதி மாறி திருமணம் செய்தால் ஊரை விட்டே ஒதிக்கி வைத்துவிடும் கட்டுப்பாடு மிக்க ஊரில் வேறு சாதி பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் நாயகன்.அதன்பிறகு என்ன ஆகிறது என்பதுதான் அரிமாபட்டி சக்திவேல் திரைப்படத்தின் கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார் இயக்குனர் படத்தின் இறுதியில் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்டு பல வருடங்களாக சொந்த ஊருக்கு செல்லமுடியாத குடும்பங்களை காட்டுகிறார்கள்.
படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்துள்ளார் பவன். பள்ளி மாணவனாக வரும் போது நமக்கே திக் என இருக்கிறது. சினிமாவில் இயக்குனராக ஆக வேண்டும் என்ற ஆசைப்படும் நாயகன் நாயகியை காதலித்து திருமணம் செய்து கொள்ள, அவர்களை ஊர் விரட்டிவிடுகிறது. நடிப்பில் இன்னும் தேர்ச்சி வேண்டும். நாயகி மேக்னா எலன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார். அழகாகவும் இருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக சார்லி வழக்கமான அப்பா வேடம்தான் சற்று மிகை நடிப்புடன் நடித்துள்ளார். மணி அமுதவன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை கதைக்கு தேவையானதை செய்துள்ளது. ஜெபி மேனின் ஒளிப்பதிவு நன்று. வழக்கமான கதைக்கு அதைவிட பழசான திரைக்கதை அமைத்துள்ளார். ரமேஷ் கந்தசாமி. இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் புதுமை சேர்த்திருந்தால் நன்றாகவே வந்திருக்கும். மொத்தத்தில் அரிமாபட்டி சக்திவேல் காதல் மன்னன்








